தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிறது.
தி. ஜானகிராமன் ‘கணையாழி’ இதழில் தொடராக எழுதி, அவரது மறைவுக்குப் பின்னர் நூல் வடிவம் பெற்ற நாவல் ‘நளபாகம்.’ அவரது நாவல்களில் மையப்பொருளை அவ்வளவு வெளிப்படையாக உணர்த்தாத நாவலும் இதுவே. இந்தப் பூடகமே நாவலை...
மரப்பசு 1975 இல் நூல் வடிவம் பெற்றது. இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தி. ஜானகிராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு “மரப்பசு”. அவரது பிற நாவல்கள்...
‘பாரதி’, ‘பெரியார்’ திரைப்படங்களை இயக்கிய ஞான ராஜாசேகரனின் ‘மோகமுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. ‘மோகமுள்’ளின் கதை வாழ்க்கையில் பழமையானது. அது எழுதப்பட்ட காலகட்டத்தில் இலக்கியத்துக்கு புதியது. முதிரா நாவலின் மையம். இந்த...
தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. தி.ஜா.வின்...
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு...
“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்களில் மிகவும் ஜனரஞ்சகமானது ‘அன்பே ஆரமுதே’. வெகுஜன இதழில் தொடராக வெளிவந்த்தனால்...
சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிராமன். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். சிரஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர்....