வைக்கம் முகம்மது பஷீர் மலையாளிகளின் இலக்கியப் பெருமிதம். வாழ்ந்து எழுதியபோது அவருக்கு வாய்த்த புகழ் இன்று பலமடங்கு பெருகியிருக்கிறது. ஒவ்வொரு வாசகனும் தன்னுடையதென்று தனி உரிமை பாராட்டும் அளவு அவரது படைப்புகள் வாசக நெருக்கம்...
வைக்கம் முகம்மது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர். தீமை, சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடு குறிப்பாகக் கோமாளிகள், மடையர்கள், திருடர்கள், குற்றவாளிகள்...
தீவிரவாதி, பத்திரிகையாளர், சுதந்திரப்போராட்ட வீரர், சாமியார், சூஃபி சமையல்காரர், காதலர், கப்பல் பணியாளர் என வாழ்வின் சகல கூறுகளினுள்ளும் உழன்று வாழ்ந்த, மலையாள எழுத்துலகில் காலங்களைக் கடந்து வாழுகிற கதையின் சுல்தான்; அக உணர்வுகளைப்...
‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக்...
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் – “சப்தங்கள்”, “மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்” – இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம்....
வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் ‘பாத்துமா வின் ஆடு’. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை,...
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு...