இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும்…...
இந்த வாழ்வின் இயக்கம், அதன் இடையறாத முன்னகர்வு தொடர்ந்து வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. கானகம்போல தவிர்ப்பதற்கு இயலாத ஒரு அழைப்பை வாழ்க்கையின் குரலில் உணரமுடிகிறது. இம்சை, காயம், வலி, முனகல், நம்பிக்கை, உற்சாகம், பிரகடனம், இசை,...
வாழ்க்கையின் எந்தப் பல் சக்கரங்களுக்குள்ளும் என் வேட்டி நுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கரை சார்ந்திருக்கிற உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும்.
கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும்...
அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்…. நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது? நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல்,...
நான் என் கிளையோடும், இலையோடும், நிழலோடும் நின்றுகொண்டு இருக்கிறேன். நான் ஒளியிலே தெரிவேன். அல்லது என் நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒரு எளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்.
உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி. இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன்...