ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை. அதிகாரத்தில்...
இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி, நுணுக்கமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை. அயோத்திதாசர் தனி மனிதரல்ல, ஒடுக்கப்பட்டவர்களின் சுயம். அடையாளமற்றவர்களின் ஆவேசம்....
உலகம் கார்ல் மார்க்சின் 2000ஆம் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த பின்னணியில் எழுதப்பட்டது இது. மார்க்ஸ் தன் கால உலகை விளக்கியவர் மட்டுமல்ல. அதை மாற்றி அமைக்க வேண்டிய அவசியங்களையும் முன்வைத்தவர். 2013 இல்...
காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு.
ஆட்சிக் கவிழ்ப்பு, ராணுவ ஆட்சி எல்லாம் பாகிஸ்தானில் அவ்வப்போது நடப்பதுதான். அயூப் கான், யாஹியா கான், ஜியா உல் ஹக் வரிசையில் வந்த பர்வேஸ் முஷாரஃப் சற்று மாறுபட்ட சர்வாதிகாரி. கார்கில் யுத்தத்தைப் பாகிஸ்தான்...
அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன. தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும்,...
உலகம் முழுவதிலும் உள்ள திபெத்தியர்களின் ஆன்மிக குருவாகவும் அரசியல் தலைவராகவும் திகழும் தலாய் லாமா, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் ஓர் அகதியாக வாழ்ந்து வருகிறார். அகிம்சையை, அன்பை, சகோதரத்துவத்தை, அமைதியை விடாப்பிடியாகப் போதித்துவரும்...
திங்க் அண்ட் வின் லைக் தோனி என்னும் இந்தப் புத்தகம் கிரிக்கெட் பற்றிய வழக்கமான மற்றுமொரு புத்தகம் அல்ல. மாறாக, இந்தப் புத்தகம் நீங்கள் எதிர்மறையான சூழ்நிலைகளுக்கு எதிராகப் போராடி, அவற்றில் வெற்றி பெறுவதற்கு...
கில்லட்டின் காதலர், கலகக்காரர், போர்வெறி பிடித்தவர், சர்வாதிகாரி, சூழ்ச்சிக்காரர் என்று நெப்போலியன் பற்றிய நெகட்டிவ் பார்வைகள் நிறையவே உண்டு. மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர், காதலில் கரைகண்டவர் என்று பாஸிட்டிவ் விஷயங்களையும்...
வைக்கம் முகம்மது பஷீர் மலையாளிகளின் இலக்கியப் பெருமிதம். வாழ்ந்து எழுதியபோது அவருக்கு வாய்த்த புகழ் இன்று பலமடங்கு பெருகியிருக்கிறது. ஒவ்வொரு வாசகனும் தன்னுடையதென்று தனி உரிமை பாராட்டும் அளவு அவரது படைப்புகள் வாசக நெருக்கம்...
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப்...
அடர்ந்த காட்டினூடே படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி, உள்ளே புதைந்து போய் மறைந்திருக்கும் நகரைக் கண்டு பிடிப்பது போல் சார்லஸ் ஆலன் வரலாற்றால் மறைக்கப்பட்ட மாமன்னன் அசோகரையும், தன் மக்களின் மகிழ்ச்சி, எங்கும் அமைதி,...
மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக, நம்பிக்கை நட்சத்திரமாக, வலிமையான வழிகாட்டியாக மாறியிருக்கிறார். வரலாற்றில் இப்படிப்பட்ட அதிசயங்கள் அபூர்வமாகத்தான்...
மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளரான கார்ல் மார்க்ஸின் இந்தச் சிறப்பான வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது வெளிவருகிறது. நூலாசிரியர் என். ராமகிருஷ்ணன் மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் விற்பனையாளராகவும்,...
முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம் முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது. தொடக்கத்தில் இத்தாலியில்...
உலகில் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு மிகவும் பரவலாக விநியோகிக்கப்பட்டு மிகவும் அதிகமாக வாசிக்கப்பட்ட மெயின் காம்ஃப் எந்த ஒருவனின் மரபுக்கொடையானது இன்றளவும் வரலாற்றை மேலெழும்பவிடாமல் அழுத்திக் கொண்டிருக்கிறதோ அந்த ஒருவனின் திகைப்பூட்டுவதும் உள்ளத்தை உறையவைப்பதுமான...
“எனது ரசிகர்கள்மற்றும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவருமே இந்த நூலை வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமானதாகவும் வாழ்க்கையை உயர்த்தக்கூடிய அளவில் மிக்க பயனளிப்பதாகவும் கருதுவார்கள் என்று நான் நம்புகிறேன்.” – ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் மிக்க தனித்துவம் வாய்ந்த,...
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு...
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு. இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று...
விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி...
யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார்...
பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ‘மாற்றம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத்...
எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்....
க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர்,...
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான். சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான...
வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி. பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின்...
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர்,...
தமது வாழ்நாளில் பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் மானுடப் போராளியின் வாழ்க்கை. மனிதனுமல்லாத விலங்குமல்லாத ஒரு நிலையில் தென் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஓர் உயிரி...
“பெண் டிரைவர்” என்ற இந்தப் புத்தகம் மிகவும் ஏழை, விளிம்புநிலையில் வாழும் பெண்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள அல்லது ஒரு வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள டிரைவர் என்கிற தொழிலை முன்னெடுத்து எப்படி வெற்றி கண்டார்கள் என்பதைச்...