மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது....
பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின் வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில்...
‘பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார்.’ – காஞ்ச அய்லய்யா இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை...
என் கதைகளில் எந்தத் தவறுமில்லை.தவறு என்று சொல்லப்படுகிற அனைத்தும் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால்,நம் காலத்தைத் தாங்கிக் கொள்ள உங்களால் முடியவில்லை என்றுதான்...
நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது! நீங்கள் விரும்புகின்றவற்றைக் கைவசப்படுத்துவதற்கு, உங்களுடைய சொந்த ஆளுமைக்குள் துயில் கொண்டிருக்கின்ற அந்த அற்புத சக்தியை விழித்தெழச் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள...
ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வினூடாக அற்புததரிசனம் தரும் நாவல்.உக்கிரமான உணர்வெழுச்சியும்,நீடித்துநிலைக்கும் பாதிப்பையும் உண்டாக்குவது.நம்காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களுள் ஒன்று.
நீங்கள் சென்றுக்கொண்டிருக்கும் பாதையை விதி வளைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கு அது உங்களைத் தூக்கி எறிந்தால் என்ன செய்வது? நீங்கள் போராடுவீர்களா, ஓடுவீர்களா அல்லது ஏற்றுக் கொள்வீர்களா? எண்பதுகளின்...
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார். மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார். 2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்.
கணவன் – மனைவி உறவு குறித்து இதுவரை வெளிவந்துள்ளதிலேயே மிகப் பிரபலமான புத்தகம். இப்புத்தகம் இலட்சக்கணக்கான தம்பதியரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது. ஆண்களும் பெண்களும் தாங்கள் ஒருவரிடம் இருந்து மற்றவர் எவ்வளவு தூரம் வேறுபட்டிருக்கிறோம்...
இந்தியர்களாகிய நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? நம்முடைய முன்னோர்களைப் பற்றிய கதையை நமக்குச் சொல்வதற்காக, பத்திரிகையாளர் டோனி ஜோசஃப், வரலாற்றின் ராஜபாட்டையில் 65,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளார். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற...
ஹுசைனி தன்னுடைய எழுத்துலகப்பிரயாணத்தைத் தன் நாட்டின் ஆண்கள் குறித்து எழுதி துவக்கியிருக்கிறார் என்றாலும் ஒரு நாவலாசிரியராக அவருடைய முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்திருப்பது ஆஃப்கானிஸ்தானின் பெண்களின் நிலையே. – தி டைம்ஸ் ‘பெண்களுக்கு வாழ்க்கை என்னவாக இருக்கிறது...