மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது....
இந்தச் சிறுகதைகளின் வழியாக அறபுகளின் சமூகம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், மத நம்பிக்கைகள், மரபு மீதான பிடிப்பு, நவீனத்தை எதிர்கொள்ளும் போக்கு ஆகியவற்றை நாம் அறியக்கூடும். இசை, ஓவியம், நாடகம், ஆடல், பாடல்...
ஆசிரியர், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி கல்வி நிலையங்களில் பேராசிரியராக, முதல்வராக பணியாற்றியவர். இவர், தான் பயணம் சென்ற நாடுகளில், படித்த புத்தகங்களில், பெற்ற அனுபவங்களை, கதை வடிவில் எழுதி உள்ளார். தான் சொற்பொழிவுகளில்...
மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகால பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள், புதிய தேவைகள், திருமணம், தாய்மை, காதல்,...
நம் சமகால உலகின் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள் புனைவாக்கி நமக்குத் தருகின்றன. மொழிகளைக் கடந்து நம்மை வந்தடையும்...
இந்தத் தொகுப்பில் உள்ள ஏழு கதைகளும் வெவ்வேறு தலைச்சிறந்த லத்தீன அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு. இரண்டாம் உலகப் போரின் பிந்தைய காலகட்டத்தின். எழுச்சியூட்டும் எழுத்தாகக் கருதப்படும் இவர்களின் எழுத்து வடிவம். வழக்கமான கதைகளின்...
அச்சங்களின் அழகைக் கண்டறிந்த ஒரே ஒரு திரைப்பட கலைஞர் ஹிட்ச்காக் தான். மர்மத் திரைப்படம் எடுப்பது மட்டுமல்லாது அச்சம் தரும் திகில் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதையும் தன் கலைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அவர்...
திபெத்தியர்கள் சிறுகதைகளும் எழுதுவார்கள் என்பதையே திபெத்தைக் கடந்து இயங்கிய வெளியுலகம் அறியவில்லை. ஆகவே திபெத்தியச் சிறுகதை தன் முகைவிரித்தலின் அறிவிப்பே இந்த நூல் என்று நான் கருதுகிறேன். அந்த முகைவிரிக்கிற வெளிப்பாடும் கூட அபாயம்,...
வாழ்வின் தனிமையை, அதன் பன்முக நெருக்கடிகளை – ஆழ் மனம் சார்ந்தும், புறச்சூழல் சார்ந்தும் – தீவிரத்துடன் அலசுபவை ஹாருகி முரகாமியின் படைப்புகள். அதேபோல, கிழக்காசிய மனித வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரத்தின் நிழல் படிவதை...
மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ்...
உலகமயமாக்கலின் காரணமாக நவீன மனம் உணரும் அந்நியத்தன்மை, வாழ்க்கையில் தோற்றுப் போனதான உணர்வு, வெகு சாதாரணமானதொரு நிகழ்வு சட்டென்று அசாதாரணமானதாக மாறும் சூழல், நிகழ்காலமும் கடந்தகாலமும் ஒன்றோடொன்று முயங்கி மனிதர்களின் முன் கனவாக விரிந்திடும் மாயத்தோற்றங்கள்...
அதிகாரத்தோடும் அரசியலோடும் நேரடித் தொடர்பு கொண்டிராதபோதும் ஒரு சமூகத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தினசரி வாழ்க்கையினூடாக நவீனத்தைப் புகுத்துவதிலும் இந்தப் பிரபஞ்சத்துக்கான பொதுவான உணர்வுகளை உருவாக்குவதிலும் கலைக்குப் பிரதான இடம் உண்டு. தற்காலச்சூழலில் அழகியல் தொடங்கி...