கூர்மையான அரசியல் பார்வையுடன் ஸர்மிளா ஸெய்யித் எழுதிய சமகாலக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு. அரசியல் – மதம் – கலாசாரம் – உடல் என அனைத்தின்மீதுமான விமர்சனங்கள், கேள்விகளை பெண்ணியப் பார்வையில் அணுகுவதில் வலுவான...
நம்பகமான, நேர்மையான வரலாற்றாசிரியர்கள் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும் – தமக்குத் தென்பட்ட விதமாகத்தான் அடுக்கித் தந்திருக்கிறார்கள்; மனச்சாய்வில்லாத ஒரு வரலாற்றாசிரியன் என்பது அமாவாசையில் முழுநிலா என்கிற மாதிரி அசாத்தியம்;...
ஒரே மாட்டின் இரண்டு கொம்புகள் போல ஒரே ஆற்றின் இரண்டு கரைகள் போல ஒரே பாடலின் இரண்டு வரிகள் போல ஒரே ராகத்தின் இரண்டு சுரங்கள் போல பகலும் இரவும் போல முகமும் முதுகும்...
புத்தகம் வாசிப்பதைப் பற்றி எதற்கு ஒரு புத்தகம்? குறிப்பாக அதை வாசிக்க முடிகிறவர்களுக்கு ஏன் எப்படி வாசிக்க வேண்டும் என ஏன் சொல்லித் தர வேண்டும்? இந்நூலை பொதுவான வாசிப்பு, இலக்கியம் சார்ந்த வாசிப்பு,...
பெருநிறுவன ஆலோசகர்கள் என்ற பதவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, உலகெங்குமுள்ள பல்வேறு நாடுகளை, திட்டமிட்ட முறையில் நயவஞ்சகமாக ஏமாற்றி, பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் சூறையாடுவதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கின்ற பெருநிறுவனங்களின் ஊழியர்கள்தாம் பொருளாதார அடியாட்கள்....
மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகால பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள், புதிய தேவைகள், திருமணம், தாய்மை, காதல்,...
அன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிருந்து தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பு, பாசாங்குகளின் மீதான நகைப்பு, அன்பின் தழும்பல்கள், உவகையின் பிதற்றல்கள், நிறைவின்...
ராபின் ஷர்மா இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சரித்திரம் படைத்த ஆமையாகவும், மிகச்சிறந்த செயல்வீரராகவும் ராபின் ஷர்மா திகழ்ந்து வருகிறார். பல பிரபல வணிக ஆளுமைகள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், கேளிக்கை உலகின் நட்சத்திரங்கள் ஆகியோர்,...
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும்...
சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே...
பல்வேறு படங்கள் சார்ந்து, கருப்பொருள் சார்ந்து வருணன் எழுதி இருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படிக்கும்போது, எல்லாமுமே சினிமாவை திறனாய்வு செய்யும் விதமாகவே இருக்கிறது. கட்டுரைகள் பல கருப்பொருள் சார்ந்து இருந்தாலும் அவை இணையும்...
எங்கும், எப்போதும் பிசினஸ் உலகின் எதிர்பார்ப்பு ஒன்றுதான். இது வேண்டாம் என்றோ இப்போது வேண்டாம் என்றோ சாக்கு போக்கு சொல்லாமல் நான் விற்கும் எதுவொன்றையும் கஸ்டமர்கள் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ளுமாறு செய்வது சாத்தியமா? சாத்தியம் என்கிறார்...
காக்கா கொத்திய காயம், ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள உங்களை...
அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம்...
காதலுக்கு காலம் இருக்க முடியுமா? மனதின் மதகுகளைத் திறந்து விடக்கூடிய கேள்வி! அழிந்து போன மம்மோத் யானை போல் எல்லாரின் மனங்களுக்குள்ளும் ஒரு காதல் பதனிடப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏன் அது அழிந்தது, ஏன்...
உலகம் கார்ல் மார்க்சின் 2000ஆம் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த பின்னணியில் எழுதப்பட்டது இது. மார்க்ஸ் தன் கால உலகை விளக்கியவர் மட்டுமல்ல. அதை மாற்றி அமைக்க வேண்டிய அவசியங்களையும் முன்வைத்தவர். 2013 இல்...
நம்மைச் சார்ந்தவர்களின், நம்மை விட்டுப் பிரிந்தவர்களின் ஞாபகம் ஏதோவொரு பழைய பாடலில் நிச்சயம் புதைந்திருக்கும். பல ஞாபகங்கள் கொண்ட பழைய பாடல்கள் அனைத்துமே பாதுகாக்கப்படவேண்டிய ஞாபகப் பேழை. அந்தப் பேழையிலிருந்து நூறு பாடல்களை இந்தப்...
உலக அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்த, ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘A Brief History of Time’ நூல், ஓர் அற்புதமான அறிவியல் படைப்பாகும். ஹாக்கிங்கின் வசீகரமான எழுத்து நடையும், காலம் மற்றும்...
21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் நூல்! பில் பிரைசன் தன்னைத் தயக்கத்துடன்கூடிய ஓர் ஊர்சுற்றி என்று கூறிக் கொள்கிறார். ஆனால் அவர் தன் வீட்டில் அடைந்து கிடக்கும்போதுகூட, தன்னைச் சுற்றி இருக்கின்ற உலகைக்...
ஆயிரம் பேருக்குச் சமைக்கும் இந்தக் கலைஞர்களின் அன்றாடத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாக குடிக் கலாச்சாரம் பின்னிக்கிடப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நாவல். உரையாடல்களால் ததும்பி வழியும் ஒரு பாதையில் இந்நாவல் பயணிப்பது வாசிப்பை இலகுவாக்குகிறது....
இணையத்தின் #1 தேடல் இயந்திரம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் விறுவிறுப்பான வெற்றிக்கதை! இன்றைக்கு நாம் எதைத் தேடுவதென்றாலும் முதலில் கூகுளுக்குதான் ஓடுகிறோம். எங்கேனும் செல்வதென்றால் கூகுள் மேப்ஸிடம் வழி...
இதில் செப்படிவித்தைகள் எதுவும் கிடையாது. மிகைப்படுத்தப்பட்ட வெற்று முழக்கங்கள் எதுவும் கிடையாது. வெற்றியைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய கண்கூடான உண்மை மட்டுமே உண்டு. உங்களுடைய தீர்மானங்கள்தாம் உங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றன....
நாம் தற்போது பயன்படுத்தும் கேலிச்சித்திரம் அல்லது நையாண்டிப் பொருள் கொடுக்கும் ‘கார்ட்டூன்’ சொல் பயன்பாட்டை பிரிட்டிஷ் பத்திரிகை ‘பஞ்ச்’ தொடங்கியது என்று சொல்கிறார்கள். 1843இல் பார்லிமெண்ட் கட்டிடம் தீக்கிரையானபோது அதன் புனரமைப்பின் தருணத்தில் பிரிட்டிஷ்...
“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.” சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக...