பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின் வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில்...
ஒற்றைப் போராக கண்முன் சித்தரிக்கப்படுவதன் வேர்களில் உள்ள முடிச்சுகளை தொட்டு எழுதி வரும் வாசுமுருகவேலின் அரசியல் பார்வை எழுத்தில் பூடகமாவே வெளிப்படும். ஆனால் இந்நாவலில் வெளிப்படையாகவே வருகிறது. நாவலில் சுட்டப்படும் தரப்புகளை விவாதிக்கலாம் மறுக்கலாம்....
சொந்த தேசத்தில் பிற ஜாதிகளிடம் புழங்க விரும்பாத மனிதர்கள் ஒரு படகிற்குள்ளோ ஒரு குடிலுக்குள்ளோ நீண்ட பயண வாகனத்திற்குள்ளோ திக்கற்று விரியும் வனாந்திரங்களுள்ளோ தம்முடைய வாழ்வை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளை அகதியாய் வந்தடைந்த தேசத்திலிருந்து...
“உம்மத்” இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. இந்த நாவல் மூன்று பெண்களின் துயர இருப்பையும் அதிலிருந்து...
அகரமுதல்வனின் எழுத்துக்கள் சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குமுறல்கள். ஆத்திரங்கள். நீதியும் அறமும் பேசும் உலகை நோக்கி எள்ளலுடன் உமிழும் எச்சில் துளிகள். சராசரி இளைஞனுக்குரிய இயல்பான வாழ்வு மறுக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் போரின் மூர்க்கக்...
கூர்மையான அரசியல் பார்வையுடன் ஸர்மிளா ஸெய்யித் எழுதிய சமகாலக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு. அரசியல் – மதம் – கலாசாரம் – உடல் என அனைத்தின்மீதுமான விமர்சனங்கள், கேள்விகளை பெண்ணியப் பார்வையில் அணுகுவதில் வலுவான...
அரசாங்கங்கள் தனது ஒற்றைத் தன்மையுடைய வழிமுறைகளை நமக்காக அதிகாரங்களை தக்க வைத்த நாட்டில் தான் வாழ்ந்த எதிர்கொள்கின்ற பல்வேறு அரசியல் சிக்கல்களை அதிகார சமமின்மைகளை வன்முறைகளை சனநாயக மீறல்களை அதிகாரத்திற்கு எதிராக நின்று பேசுகின்ற...
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.
2001 இன் பின்னான நிகழ்வுகளின் காலக்களத்தைக் கொண்டிருப்பதாலேயே “கனவுச் சிறை”யின் தொடர்ச்சியாக இந் நாவலைக் கொண்டுவிடக் கூடாது. “கனவுச் சிறை”கனவுகளற்ற இலங்கைத் தமிழ் மக்களின் போர்க் கால அவலங்களைச் சொல்லியது. அரசியல் பின்னணியிலிருந்து நாவலின்...
காக்கா கொத்திய காயம், ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள உங்களை...