இந்தப் புத்தகம் என் மூலம் உங்களுக்குத் தரும் கருத்துகள் எதுவும் முடிவானவையல்ல. உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் இதில் அடித்தல் திருத்தல்கள் செய்யலாம். கிழித்துப் போட்டுவிட்டுப் புதிய அத்தியாயங்களை எழுதிச் சேர்க்கலாம். அல்லது உங்கள் விருப்பப்படி...
பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ISI குறித்த விரிவான அறிமுகத்தைத் தருகிறது இந்நூல். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பின் இருப்பும் செயல்பாடுகளும் இன்றளவும் மர்மமானவையே. இந்தியாவில் நிகழும்...
இதுவொரு தலைமுறையின் கதை. குடும்பமொன்றின் சிதறல்களின் வழியாகத் தனிமனிதன் ஒருத்தனை முன்னிறுத்தி விரியும் இந்நாவல், அவனைப் போலவான மனிதர்கள் யாவரையும் ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கிறது. வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. அக்கோட்டின் மையத்தில்...
நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது....
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது. அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இத்தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால்...
அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற, அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித்துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள் குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய் உணரும் கணத்தில் என்னவாக மாறுகிறான்? இந்த ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று...
பிரபு கங்காதரனின் ‘காளி’ தொகுப்பு தமிழில் இதுவரை பேசியிராத தாந்த்ரீகப் பாலியல் பற்றிப் பேசுகிறது. இந்தத் தொகுப்பு தமிழ்க் கவிதை உலகில் பல நூற்றாண்டுகள் பேசப்படும். – சாரு நிவேதிதா
ஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்றம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன. – எஸ். சண்முகம்
எந்த பிம்பமும் இல்லாத நவீன மனதின் நேரடியான எழுத்து… புனிதத்தால் கட்டமைக்கப்பட்ட பொய்களை எளிமையாக உடைந்து உண்மையை உணர்த்துபவை . நான் எழுத முடியாமல் இருக்கும் பல உண்மைகளைச் சொல்பவை . ஆண்களுக்கு சிரிப்பையும்...
சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைக்கதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம். -ஜெயமோகன் மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள்...
தமிழில் அறிவியல் புனைவுகள் சொற்பமாகவே எழுதப்பட்டு வருகின்றன. Virtual Reality Headsetஐ மாட்டிக் கொண்டதும் அது எப்படி நம்மை முற்றிலும் புதிய வேறோர் உலகத்துக்கு இட்டுச் செல்கிறதோ அதேபோல் அறிவியல் புனைவும் நாம் இதுவரை...
“அரூ” கனவுருப்புனைவு (science fiction & fantasy) சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ். 2021ஆம் ஆண்டிற்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த...
ஒரு எழுத்தின் வெற்றி என்பது வாசகனைத் தன்னை அந்த எழுத்தில் தேடவைப்பதில் உள்ளது. இதில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவருக்குமான அடையாளங்களுடன் நிரம்பி உள்ளது அல்லிக்கேணி. அல்லிக்கேணி வாழ்வின் பகுதிகள் திருப்பு முனைகளும்...
அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று...
ஓர் ஆண்டில் இந்தியர்கள் மிக அதிகம் எதற்காகப் புலம்புவார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் முதலிடத்தில் வரக்கூடிய பிரச்னை எரிபொருள் விலை ஏற்றம். ஏன் ஏறுகிறது எரிபொருள் விலை? யார் ஏற்றுகிறார்கள்? கச்சா எண்ணெயின் விலையைத்...
வாகனங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டன. வாகனங்கள் மூலமாக நமக்கு ஏற்படும் அனுபவங்களும், டாச்சர்களும் ஏராளம். லிஃப்ட் கொடுப்பது, குடும்பச் சுற்றுலா, டிராஃபிக் போலீஸ் என அனைத்து ஏரியாக்களையும் நகைச்சுவையுடன் அணுகுகின்றன இந்தக்...
உலக மர்மங்களில் மிகமுக்கியமானதொன்றாகக் கணிக்கப்படும், ‘பயிர் வட்டச் சித்திரங்கள்’ (Crop circle) மனிதர்களால், உருவாக்கப்படுகின்றனவா இல்லை மனிதர்களல்லாத வேறு ஏதோ, அமனித சக்தியினால் உருவாக்கப்படுகின்றனவா என்பதை, ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?’ என்னும் இந்த...
பணி நிமித்தமாக சொந்தநாட்டைப் பிரிந்து அமெரிக்காவின் ஃபிளாரிடா மாகாணத்தில் வசிக்கும் ஒரு சாமானியன் தனது குடும்பத்தோடு இர்மா எனும் பெருஞ்சூராவளியை எதிர்கொண்ட அனுபவம் ஒரு புதினமாகி இருக்கிறது. “..அமெரிக்காவைப் பற்றி, அந்த நிலப்பரப்பை பற்றி,...
தற்போது காதலிக்கும் பெரும்பாலானோர் ஒத்த வயதுடையவர்கள். பழங்காலம் போல பெண் ஆணை விட நான்கைந்து வயது குறைவாக இருப்பதில்லை. ஆணை விட பெண்ணுக்கு குறைந்த வயதிலேயே மெச்சூரிட்டி வந்து விடுகிறது. ஒரே வயதில் காதலிப்பவர்களின்...
இந்த நாவல் வெளிவந்த புதிதில் பிரம்மராஜன் இது ஜேம்ஸ் ஜாய்ஸின் A Portrait of the Artist as a Young Man நாவலில் ஒரு முக்கியமான கண்ணி உண்டு. எந்த ஒரு இடத்திலும்...
புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல....
நம்பகமான, நேர்மையான வரலாற்றாசிரியர்கள் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும் – தமக்குத் தென்பட்ட விதமாகத்தான் அடுக்கித் தந்திருக்கிறார்கள்; மனச்சாய்வில்லாத ஒரு வரலாற்றாசிரியன் என்பது அமாவாசையில் முழுநிலா என்கிற மாதிரி அசாத்தியம்;...
ஒரே மாட்டின் இரண்டு கொம்புகள் போல ஒரே ஆற்றின் இரண்டு கரைகள் போல ஒரே பாடலின் இரண்டு வரிகள் போல ஒரே ராகத்தின் இரண்டு சுரங்கள் போல பகலும் இரவும் போல முகமும் முதுகும்...
கவிஞர்அய்யப்பமாதவன் ‘எனக்குப் பிடித்தகவிதைகள்’ எனும் தலைப்பில் தமிழின் சமகாலக்கவிஞர்கள், இளைஞர்களின் புதிய முயற்சிகள் அவற்றில் தனித்துத்தென்படும் கூறுமுறைகள் பலவற்றையும் கவனித்து அவற்றிலிருந்து நூற்று பனிரெண்டு கவிதைகளைத்தொகுத்து ஒரு தொகை நூலாக்கியிருக்கிறார். நுட்பமான அவதானிப்புகளுடனும் கவிதைச்...
புத்தகம் வாசிப்பதைப் பற்றி எதற்கு ஒரு புத்தகம்? குறிப்பாக அதை வாசிக்க முடிகிறவர்களுக்கு ஏன் எப்படி வாசிக்க வேண்டும் என ஏன் சொல்லித் தர வேண்டும்? இந்நூலை பொதுவான வாசிப்பு, இலக்கியம் சார்ந்த வாசிப்பு,...
ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை,...
என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்து காட்டும்போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை...
தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக...