தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்டுகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே...
ராபர்ட் மேனார்ட் பிர்சிக், மினஸோட்டாவில் உள்ள மினியபோலிஸில் 1928ல் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளர், மற்றும் தத்துவவாதி. ஒன்பது வயதில் இவருடைய ஐ.க்யூ. 170ஆக இருந்ததாலிவர் பல வகுப்புகள் படிக்காமல் 1943ல் உயர்நிலைக்கல்வி பட்டயம்...
வெறும் இடங்கள், வெறும் ரயில் நிலையங்கள், வெறும் சிறிய பொருட்கள் மற்றும் கணங்கள்; ஞாபகங்களை மொழியில் நெய்வது தவிர நீ செய்வது ஒன்றுமில்லை. ஆனால் அதைவிட இந்தப் பிரபஞ்சத்தை அலங்கரிப்பதும் வேறில்லை. – பா....
ஹென்றி சார்லஸ் புகோவ்ஸ்கி ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த கவிஞர், புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழ்விளைவுகளின் பாதிப்பு அவரது படைப்புகளில்...
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப்...
ஒன்றிலிருந்து விடுபடுவதற்காகப் பிரிதொன்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறோம். இதுவரை புனைவில் அரிதாகக் கையாளப்பட்ட பங்குச் சந்தை- இடபத்தின் களமாக இருப்பது சுவாரசியம். நுட்பமான யதார்த்தப் பதிவு. உத்திரவாதங்களற்ற இன்றைய காலகட்டத்தில் பணம் தரும் பாதுகாப்பானது உடைத்து...
எந்தக் கவிஞனும், எந்தக் கலைஞனும் அவனுக்கான முழு அர்த்தத்தை அவன் மட்டுமாகப் பெறுவதில்லை. அவனுடைய முக்கியத்துவம், அவன் பற்றிய மதிப்பீடு என்பது, அவனுக்கும் மறைந்த கவிஞர்கள்,கலைஞர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மதிப்பீடு தான். தனியாக...
ஃப்ரான்ஸ் காஃப்கா சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது...
மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ்...
வாழ்க்கை பாதையை மாற்றியமைத்த புத்தகம்…. மசானபு ஃபுகோகா, இந்தியா வந்திருந்தபோது பிரதம மந்திரி அலுவலகம் கொடுத்த அரசு விருந்தில் கலந்துகொண்டு உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பிவிடுகிறார். அன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்,”இவ்வேளாண்முறை சிறிய நாடுகளுக்கு...
உலகமயமாக்கலின் காரணமாக நவீன மனம் உணரும் அந்நியத்தன்மை, வாழ்க்கையில் தோற்றுப் போனதான உணர்வு, வெகு சாதாரணமானதொரு நிகழ்வு சட்டென்று அசாதாரணமானதாக மாறும் சூழல், நிகழ்காலமும் கடந்தகாலமும் ஒன்றோடொன்று முயங்கி மனிதர்களின் முன் கனவாக விரிந்திடும் மாயத்தோற்றங்கள்...
ஹான்ஷான் என்றால் குளிர்ந்த மலை எனப் பொருள்படும். சீனாவின் தாங் பேரரசைச் சேர்ந்த ஹான்ஷான் எனும் ஜென் துறவி, தாவோயிய மற்றும் சான் மரபையொட்டி எழுதிய கவிதைகளில் இருந்து நூறு கவிதைகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன....
கார்ல் எழுத்துக்களின் இன்னொரு முக்கியமான பண்பு அவை ideological (கருத்து நிலை) சுமையற்றவை என்பது. அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை, அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார். பெரும்பாலும்...
“தன் வாழ்வின் இருண்ட மூலைகளின் விளிம்புகளை நோக்கி விரக்தியுடன் துரத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் ‘சூன்யப் புள்ளியில் பெண்’. தனக்குள் அத்தனைச் சோகத்தையும் விரக்தியையும் பிர்தவ்ஸ் கொண்டிருந்தபோதும், அவருடைய வாழ்வின் கடைசி நொடிகளை அருகில்...
“ஓசை நிறைந்த மொழியும் சொல்லும் கவிதையின் முதல் பெருங்காமம். மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக் கவிதைகள் உண்மையை மட்டுமல்ல எந்த ஒரு பொய்யையும் கூடச் சொல்வதில்லை. சொல்லுதல் தவிர அதற்கு வேறு எதுவும் தெரியாது,...
சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம். இதயத்துடிப்பை வேகமாக்கி, மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு. – பீப்பிள் மேகஸின் இது ஒரு முழுமையான மேதைமை. நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச்...
தன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தலைப்பட்டபோது, பைத்தியமெனவும், இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தைத் தேடுபவர் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இந்த உற்சாகமான, ஆர்வமூட்டும் நூல்...
இந்த நாவலில் கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் மிகக் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப்படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள்...
அதிகாரத்தோடும் அரசியலோடும் நேரடித் தொடர்பு கொண்டிராதபோதும் ஒரு சமூகத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தினசரி வாழ்க்கையினூடாக நவீனத்தைப் புகுத்துவதிலும் இந்தப் பிரபஞ்சத்துக்கான பொதுவான உணர்வுகளை உருவாக்குவதிலும் கலைக்குப் பிரதான இடம் உண்டு. தற்காலச்சூழலில் அழகியல் தொடங்கி...
இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும்...
பட்ட விரட்டி என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய- அமெரிக்கரான காலித் ஹூசைனியால் எழுதப்பட்ட முதல் புதினம். ஒரு ஆப்கானியரால் முதன் முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் என்கிற சிறப்பையும் பெற்றது இந்நூல். காபூலின்...
பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர்...
சமகால இந்திய எழுத்தாளர்களில் மிகச் சிறந்த கதைசொல்லிகளில் ஒருவர்’ – ஃபோர்ப்ஸ் இந்தியா ‘சலீம், தன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்காக விரிவான உலகைப் படைப்பவர்… பார்வையற்றவளின் சந்ததிகள் நாவல் தன் எழுத்தெனும் நுண்ணிய இழைகளால்...
எனக்கு மனித இனத்தின் மேல் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அது நிலத்தை அழிக்கும் அளவிற்கு அறிவைப் பெருக்கிக் கொண்டுவிட்டது. இயற்கையை அடக்கி அடிபணியச் செய்வது நமது அணுகுமுறை. நாம் இந்த உலகிற்குத் தகுந்தாற் போல...
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக்...
கார்ல் மார்க்ஸ் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியிலேயே தமிழ்இலக்கிய உலகில் மிக வலுவான தடத்தைப் பதித்திருக்கிறார் என்று சொன்னால் அது சம்பிரதாய வார்த்தைகளாகப் போய்விடும். கார்ல் மார்க்ஸ் என்ற ஒரு மகத்தான கலைஞன் தமிழில்...