மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது....
‘பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார்.’ – காஞ்ச அய்லய்யா இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை...
ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வினூடாக அற்புததரிசனம் தரும் நாவல்.உக்கிரமான உணர்வெழுச்சியும்,நீடித்துநிலைக்கும் பாதிப்பையும் உண்டாக்குவது.நம்காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களுள் ஒன்று.
ஒற்றைப் போராக கண்முன் சித்தரிக்கப்படுவதன் வேர்களில் உள்ள முடிச்சுகளை தொட்டு எழுதி வரும் வாசுமுருகவேலின் அரசியல் பார்வை எழுத்தில் பூடகமாவே வெளிப்படும். ஆனால் இந்நாவலில் வெளிப்படையாகவே வருகிறது. நாவலில் சுட்டப்படும் தரப்புகளை விவாதிக்கலாம் மறுக்கலாம்....
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார். மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார். 2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்.
ஹுசைனி தன்னுடைய எழுத்துலகப்பிரயாணத்தைத் தன் நாட்டின் ஆண்கள் குறித்து எழுதி துவக்கியிருக்கிறார் என்றாலும் ஒரு நாவலாசிரியராக அவருடைய முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்திருப்பது ஆஃப்கானிஸ்தானின் பெண்களின் நிலையே. – தி டைம்ஸ் ‘பெண்களுக்கு வாழ்க்கை என்னவாக இருக்கிறது...
இது அம்பேத்கர் எழுதிய முதல் நூல் என்பதால் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கம் காரணமாகவும் முக்கிய நூலாக விளங்குகிறது. அவரின் பிற்கால அரசியல் செயற்பாடுகளின் செயற்களமாகவும், ஆய்வுச் சிந்தனைகளாகவும் அமைந்த சாதி மறுப்பு அரசியலின் தொடக்கமாக...
இந்தச் சிறுகதைகளின் தொகுப்பிற்கு நண்பர் கரீம் ‘இருண்டகாலக் கதைகள்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சமகாலத்தைப் பேசும் கதைகள். சம காலத்தில் நாம் எல்லோரும் எதிர்கொண்டுள்ள எதார்த்தங்களைச் சொல்லும் கதைகள். இளங்கோ கிருஷ்ணனின்...
அற்புதமான, தீர்க்கமான மற்றும் பரந்த பார்வை கொண்ட இவ்வுலகை மாற்றுவது எப்படி என்கிற இந்த புத்தகம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இதற்கு முந்தைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு மட்டுமல்லாமல் இந்த நூற்றாண்டிற்கும் மார்க்ஸ் ஒரு சிந்தனையாளர் என்கிற எண்ணத்தை...
இந்தச் சிறுகதைகளின் வழியாக அறபுகளின் சமூகம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், மத நம்பிக்கைகள், மரபு மீதான பிடிப்பு, நவீனத்தை எதிர்கொள்ளும் போக்கு ஆகியவற்றை நாம் அறியக்கூடும். இசை, ஓவியம், நாடகம், ஆடல், பாடல்...
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல… பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்காதவை. அதுமட்டுமல்ல...
கூர்மையான அரசியல் பார்வையுடன் ஸர்மிளா ஸெய்யித் எழுதிய சமகாலக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு. அரசியல் – மதம் – கலாசாரம் – உடல் என அனைத்தின்மீதுமான விமர்சனங்கள், கேள்விகளை பெண்ணியப் பார்வையில் அணுகுவதில் வலுவான...
பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழுது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த...
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென...
மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகால பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள், புதிய தேவைகள், திருமணம், தாய்மை, காதல்,...
1984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக...
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு மகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால், பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக மக்களை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே...
புத்தகத்தின் தலைப்பைத் தாண்டியும் புனைவாக்கம் தொடர்பான பல விஷயங்களை பேசுகிறது. வெறும் உத்திகளாக மட்டுமே பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த பல புனைவாக்கக் கூறுகளையும் பரிசோதனை மாதிரிகளையும் புனைவு வரலாற்றோடும் சமகால சமூக இயக்கத்தோடும் பொருந்திப் புரிந்துகொள்ள வேண்டுகிறது.முப்பதாண்டு...
தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது. முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்,...
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். அறிவியலாளர் கார்ல் சகனின் முன்னுரையில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைத்...
நாம் தற்போது பயன்படுத்தும் கேலிச்சித்திரம் அல்லது நையாண்டிப் பொருள் கொடுக்கும் ‘கார்ட்டூன்’ சொல் பயன்பாட்டை பிரிட்டிஷ் பத்திரிகை ‘பஞ்ச்’ தொடங்கியது என்று சொல்கிறார்கள். 1843இல் பார்லிமெண்ட் கட்டிடம் தீக்கிரையானபோது அதன் புனரமைப்பின் தருணத்தில் பிரிட்டிஷ்...
ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய் , ஆழம் புதைந்து கிடக்கும். உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது. பாசத்திற்கும், அன்பிற்கும், பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே...
இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்குக் கூட்டி வரப்பட்ட பரம்பரைகளின் வழித்தோன்றல்களாக இன்றும் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பிறந்து, அங்கேயே உடல் தேய வேலை செய்து, மரித்து, அதே பயிர்களுக்கு உரமாகிப் போகும் ஏழைக் கூலித்...
இங்கே தரப்பட்டுள்ள எனது தந்தையின் சுயசரிதை நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காக எழுதப்பட்டவை. எப்போதேனும் பிரசுரிக்கப்படலாம் என்கிற எண்ணத்தோடு ஒருபோதும் அவை எழுதப்படவில்லை. அவ்வாறிருக்கச் சாத்தியமில்லை எனப் பலருக்குத் தோன்றலாம்; ஆனால் அவரைப் பற்றி நன்கு...
பேராசிரியர் கூகி வா தியாங்கோ ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித்...
இரண்டாம் உலகப்போருக்கப் பின் வெளிவந்த சிறந்த பொருளாதார நிபுணர்களிடம் செல்வாக்குப் செலுத்திய 100 நூல்களில் ஒன்றென டைம்ஸ் பத்திரிக்கையால் கொணடாடப்பட்ட ஐரோப்பாவின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்றான Prix europeen de lissal Charles Vellon...
இந்தப் புத்தகம், இன்னொரு பாடம் குறித்த மற்றுமொரு புத்தகம் அல்ல. இந்தப் புத்தகம், நீங்கள் படிக்கும் பாடங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உங்களைத் திறன்பெற்றவர்களாக ஆக்க முயல்கிறது. தத்துவ அடிப்படையில் சிந்திப்பது நீங்கள் மேலும்...
நம் சமகால உலகின் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள் புனைவாக்கி நமக்குத் தருகின்றன. மொழிகளைக் கடந்து நம்மை வந்தடையும்...