‘அர்த்தநாரி’யை எழுதும்போது பெரும் சுதந்திர மனநிலையில் இருந்தேன். என் மனமும் கைகளும் வெகு இயல்பாக இணைந்தன. அதன் வெளிப்பாடுகளை இதில் பரக்கக் காணலாம். இன்றைக்கு நாம் வாழும் வாழ்வில் இத்தனை சுதந்திர மனநிலை கூடாதோ...
பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும்,...
மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும்...
‘மாதொருபாகன்’ முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும்...
பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப்...
வாழ்வு குறித்த சுதந்திரமான பார்வையுடன் இலக்கியப் பரப்பில் கவனம் பெற்றிருக்கும் கே.என். செந்தில் கடந்த காலத்துடனான உறவை முறித்துக்கொள்ளும் எத்தனிப்புகள் கொண்டவர். அவரது படைப்புமொழி வாழ்வுக்குக் கடந்த காலம் வழங்கியுள்ள அர்த்தங்களை நம்ப மறுப்பது....
நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் ஞாபகப் புத்தகம் “இஸ்தான்புல்”. தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூரும் இந்நூலில் பாமுக் தனது இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்கிறார்....
# MeToo இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கும் இந்தக் கட்டுரைகள், அந்த இயக்கத்தின் சமகாலச் சிக்கல்களுடன் நிற்காமல் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு வெளிப்பாடுகள், பாலுறவில் பெண்ணின் சம்மதம், பால் அடையாளங்களின் உருவாக்கம் எனப் பல புள்ளிகளையும்...
“உம்மத்” இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. இந்த நாவல் மூன்று பெண்களின் துயர இருப்பையும் அதிலிருந்து...
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் “விழா மலரை”உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய...
இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை...
1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் “ஒரு புளிய மரத்தின் கதை” ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை...
அன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிருந்து தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பு, பாசாங்குகளின் மீதான நகைப்பு, அன்பின் தழும்பல்கள், உவகையின் பிதற்றல்கள், நிறைவின்...
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின்...
இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது....
துயரம், நினைவுகள், காதல் இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் ‘கடலை’ உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு...
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும்...
அசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் “கரைந்த நிழல்கள்”நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று. தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதி பகுதியாகவும்இ நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு...
பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டி கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் “கழிமுகம்” பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச்...
காக்கா கொத்திய காயம், ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள உங்களை...
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் “காதுகள்” என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன்...
கூளமாதாரி, பண்ணையாட்களாக வேலை செய்யும் தலித் சிறுவர்களின் வாழ்வை அவர்களின் பார்வையினூடாக விவரிக்கிறது. பதின்பருவத்தின் அவர்கள் இல்லாமை, அதிகாரம், சுயநலம், தீண்டாமை முதலியவற்றின் பிடிகளுக்கு உட்பட்டும் உயிரியல்பான அன்பு, காதல், காமம் உள்ளிட்டவற்றின் மலர்ச்சிக்கு...
தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிறது.
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன்...
பௌத்தம் ஒரு பெருங்கடல். தமிழ், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம், சீனம் ஜப்பான், திபெத், கொரியன், சிங்களம், ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. எனவே, பௌத்த...
பதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் இந்த நாவல். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாயிருக்கலாம். ஆனால் மனதளவில் கடக்க வேண்டிய தொலைவு சுலபமானதில்லை. அதுவும் தகுந்த...
1997 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல். சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக் கிடைக்கும்.
பதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார்? இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?’ இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கும் அந்த நொடியிலிருந்து சோஃபியின்...
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . “தண்ணீர்” சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால்...
வ.கௌதமனின் ‘மகிழ்ச்சி’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. குமரி மாவட்டத்திலுள்ள இரணியல் செட்டியார் என்ற ஒரு சமுகத்தின் சமுக, கலாச்சார வாழ்வை வெகு விஸ்தாரமாகச் சொல்கிறது. “தலைமுறைகள்”. “திரவி” என்ற திரவியத்தின் பார்வையில்...