பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின் வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில்...
அரசாங்கங்கள் தனது ஒற்றைத் தன்மையுடைய வழிமுறைகளை நமக்காக அதிகாரங்களை தக்க வைத்த நாட்டில் தான் வாழ்ந்த எதிர்கொள்கின்ற பல்வேறு அரசியல் சிக்கல்களை அதிகார சமமின்மைகளை வன்முறைகளை சனநாயக மீறல்களை அதிகாரத்திற்கு எதிராக நின்று பேசுகின்ற...
கானா பிரபா ஒரு புதிய கம்போடியாவை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். பல சுவையான தகவல்கள். சில தகவல்கள் எமது இலங்கைக்கேயுரிய குணங்குறிகளுடன் காணப்படுகின்றன. காட்சிகளை எமது கற்பனைக்கு மட்டும் விட்டுவிடாமல் அழகிய வர்ணப்படங்களுடன் அவற்றைத் காட்சிப்படுத்தியிருக்கிறார்....
2001 இன் பின்னான நிகழ்வுகளின் காலக்களத்தைக் கொண்டிருப்பதாலேயே “கனவுச் சிறை”யின் தொடர்ச்சியாக இந் நாவலைக் கொண்டுவிடக் கூடாது. “கனவுச் சிறை”கனவுகளற்ற இலங்கைத் தமிழ் மக்களின் போர்க் கால அவலங்களைச் சொல்லியது. அரசியல் பின்னணியிலிருந்து நாவலின்...
கர்ணனுடைய இரண்டாவது தொகுப்பாகிய சேகுவேரா இருந்த வீடு, அவர்மீதான விமர்சனங்களுக்கு ஓரளவுக்குப் பதிலாக வந்திருக்கிறது. மொத்தம் பதின்மூன்று கதைகள் இதிலுண்டு. ஏறக்குறைய ஏழுகதைகள். அவரை அதிகாரத்தின் ஒரு அடுக்கை மட்டுமல்ல. எல்லா அடுக்குகளையும் எள்ளிநகையாடுபவராக...
நவீன கிட்லர்களின் கீழ் அடக்குமுறையாளர்களின் கீழ் இராணுவ ஆட்சிகளில் கூட ஆளும் வர்க்கத்துடன் மௌனமாய் உடன்பட்டவர்களாலோ தத்தம் வேலையைப் பார்த்தவண்ணம் கடந்து செல்பவர்களாலோ அன்றி தமது வரையரைகளுக்குள்ளும் தமக்கு நியாயமெனப் பட்டதை செய்பவர்களாலேயே மனித...
ஒரு ஊழிக் காலத்தின் பாடல்களை எந்த விதமான பாசாங்குகளுமற்ற மொழியில்ப் பாடிப் போயிருக்கும் இக் கவிதைகள் எழுதப்பட்ட மொழிக்குரிய மக்களுக்கு மாத்திரம் உரியதல்ல. உலகமெங்கும் அதிகாரங்களின் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் உரியது....
இலங்கை, இந்தியா, ஜேர்மனி, கனடா என்று பல தேசங்களை சுற்றிய அனுபவமும் அந்தந்த தேசத்து கலாச்சார உணர்வுகளும் கட்டுரைகள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. ஒரு தனிப்பட்ட நாட்டு அனுபவமாக இல்லாமல் இவர் சொல்லிப்போகும் விடயங்கள்...