பெண்களின் உணர்வுகளை இந்த அளவிற்கு எளிமையாகவும், தெளிவாகவும் பதிந்த யதார்த்த நாவல் சமீபத்தில் இதுதான் என்றே தோன்றுகிறது. உமா மகேஸ்வரி ஒரு கவிஞர் என்ற முறையில் மொழியையும் பெண் என்ற வகையில் பாத்திரங்களின் உணர்வோட்டத்தையும்...
வாழ்வின் ஒரு நொடி கூட மாற்று இல்லாமல் எல்லா நேரங்களிலும் கலப்பில்லாத கலைஞனாகவே வாழ்ந்து நிறைவடைந்தவர் அவர். சத்தமில்லாமல், அதிராமல், நிதானமாய் வாழ்ந்த வாழ்வு அது. நான் இப்படித்தான் இருப்பேன், அது மாறாது. புலியின்...
சொல்லில் விவரிக்க முடியாத சோகமும் வாழ்வின் குரூரங்களும் இந்தத் தொகுப்பெங்கும் விரவி இருந்தாலும் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய தில்லை, இந்த வாழ்க்கை வாழத்தக்கதுதான் என்றும் அத்தனை அவலங்களையும் தாண்டி...
வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி...
எர்ணாகுளத்தில் பிறந்து பீகார் மாநிலத்தில் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணிபுரியும் என்.எஸ்.மாதவனின் எழுத்துக்கள் பலராலும் பாரட்டப்பட்டவை. இவருடைய ‘ஹிக்விக்டா’ என்ற சிறுகதை இந்த நூற்றாண்டின் சிறந்த கதைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. சாகித்ய அகாதெமி விருது...
மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது...
மலையாள இலக்கியத்தில் முக்கியக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் கல்பட்டா நாராயணன், சுமித்ரா இவருடைய முதல் நாவல். கவிஞர் என்பதால் இந்த நாவலும் கவிமொழியுடனேயே உருவாகியுள்ளது. பெண்களின் அகவுலகை அறிமுகம் செய்யும் இந்நூல் மலையாளத்துக்கே உரிய...
சூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்.
பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள்,...
முன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல, சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன். இந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும்...
மழையற்ற ஒரு நாளில்தான் இப்புத்தகமும் நிறைவு பெறுகிறது. நீண்ட நாட்களாய் ஒரு துளி மழைக்காய் காத்துக்கிடக்கிறோம். அவள் இரக்கமற்றவள். இப்புத்தகத்தை அச்சுக்கு அனுப்புவதன் மூலம் நானும் அவளை இன்று இரக்கமற்று நிராகரிக்கிறேன். -பவா செல்லதுரை
இக்கதைகளை படிக்க நேர்ந்த வாசகர்கள், தங்கள் மொழியிலும் சிறந்த படைப்புகளைத் தேடிப் படிப்பர். இக்கதை மாந்தர்களின் உணவு எந்தச் சமையல் அறை வாணலிகளிலும் வலுபட்டதாய் இல்லை. அலைந்து திரியும் வேர்களைக் கொண்டவர்கள். துரதிருஷ்டவசமாக இவர்கள்...
வாழ்வின் தனிமையை, அதன் பன்முக நெருக்கடிகளை – ஆழ் மனம் சார்ந்தும், புறச்சூழல் சார்ந்தும் – தீவிரத்துடன் அலசுபவை ஹாருகி முரகாமியின் படைப்புகள். அதேபோல, கிழக்காசிய மனித வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரத்தின் நிழல் படிவதை...
தான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள் நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான பரிமாணங்களை நாம் தரிசிக்க...
இடது சாரி இயக்கங்களோடு தன் நாற்பது வருடங்களை கரைத்திருக்கும் பவா அதில் கண்டடைந்த தன் மேய்ப்பர்களாக பல உன்னதமான கலைஞர்களை, பெரும் ஆளுமைகளை, பேச்சாளர்களை, ஓவியர்களை, நாடகக்காரர்களை களப்பணியாளர்களை நம் முன் கட்டுரைகளுக்கும் மேலான...
சூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்… யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது....
எப்போதும் பயணங்களே மனித ஜீவிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. செல்வமின்றி, அதிகாரமின்றி, எதிர்ப்பார்ப்பின்றி ஷௌக்கத் மேற்கொண்ட பயணத்தில் உண்மையும் அதனால் மேலெழுந்த மொழியும் கூட வந்திருக்கின்றன. புனைவுக்கும் சற்று மேலே வைத்துப் பார்க்கக் கூடிய இப்பிரதியில்...
தமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து...
7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும்போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொரு பிரபஞ்சத்துக்கு இன்பமாகக் கடத்துகின்றன. மாற்று மரபணுவாகக்...
மனித உயிர்கள் மட்டுமல்லாமல் செயர்கையாய் உருவாக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் ஏதோ ஒரு வகையில் இந்த பூமிக்கு பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதை ஒரு குண்டூசியின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. இந்தக் கதையில் வரும் குண்டூசி, எலி,...
ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது....