பழகும் எல்லா ஆண்களும் உன்னிடம் காதல் சொல்லிவிடுவதாக குறைபட்டாய் “பெண்ணிடம் நட்பாக மட்டுமே பழகமாட்டார்களா? ஆண்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ, ஆனால் நீ அப்படி இல்லை – அதனால் உன்னை மிகப்பிடிக்கும்” என்றாய், எச்சரிக்கும்...
தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். அவர்கள் வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய...
வெவ்வேறு மனநிலைகளில் இருந்து எழுதிய மாயா கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் ஒரு பறவையைப் போல கடந்த காலத்திற்குள் சென்றமர்ந்து மீள்கிறேன். காதலும், கண்ணீரும், ஏக்கமும், கொண்டாட்டமும், பதற்றமும், நிராகரிப்புகளும் சில்வண்டுகளைப் போல ரீங்காரமிட்டுச் செல்கின்றன....
பல்வேறு படங்கள் சார்ந்து, கருப்பொருள் சார்ந்து வருணன் எழுதி இருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படிக்கும்போது, எல்லாமுமே சினிமாவை திறனாய்வு செய்யும் விதமாகவே இருக்கிறது. கட்டுரைகள் பல கருப்பொருள் சார்ந்து இருந்தாலும் அவை இணையும்...
அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம்...
காதலுக்கு காலம் இருக்க முடியுமா? மனதின் மதகுகளைத் திறந்து விடக்கூடிய கேள்வி! அழிந்து போன மம்மோத் யானை போல் எல்லாரின் மனங்களுக்குள்ளும் ஒரு காதல் பதனிடப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏன் அது அழிந்தது, ஏன்...
நம்மைச் சார்ந்தவர்களின், நம்மை விட்டுப் பிரிந்தவர்களின் ஞாபகம் ஏதோவொரு பழைய பாடலில் நிச்சயம் புதைந்திருக்கும். பல ஞாபகங்கள் கொண்ட பழைய பாடல்கள் அனைத்துமே பாதுகாக்கப்படவேண்டிய ஞாபகப் பேழை. அந்தப் பேழையிலிருந்து நூறு பாடல்களை இந்தப்...
சாதிய விஷம் நீர்த்துப்போகாது இன்னும் பரவலாகத் துளிர்விட்டபடியே இருக்கிறது. அந்த அடக்குமுறை ஒருபுறம் என்றால், பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இன்னும் பல அடுக்குகள் கொண்டவை. அப்படியான துயர்தோய்ந்த காலத்தில் பாறைப் பிளவுகளில் தன் வேர்...
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல...
போலி கவிசாகசப் பாவனைகள் தவிர்த்து, வாழ்வனுபவங்களின் அதன் மீச்சிறு தருணங்களின் மீதான அவதானிப்புகள் வழியே எளிமையாகப் பிறக்கும் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன. கவிதைகளின் காட்சிகளில் குரல்களில் பொருண்மைகளில் தொனிக்கும் உணர்ச்சி மிகுதி அதன் பலமும்...
முன்னாள் இந்நாள்என்றெல்லாம் இல்லைகாதல் எந்நாளுக்குமானதுஉனக்கும் எனக்குமானஇந்தக் கால இடைவெளிஊதினால் பறந்துவிடும் தூசிப்படலம்.என்றைக்கானாலும் சரிநீ வந்து முன் நின்றால்என் ஆணிவேர் அசையும்ஏற்றிவைக்க மட்டுமே வழியுள்ளகாதலின் பீடத்தில்நீயே ராணி.
“நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த...
ராணுவம் தனியார்மயமாக்கப்படுவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தனியார்மயமாக்கப்படுவது ஆகியவை இன்று சர்வசாதாரணமாகிவிட்டன. இவை எங்கிருந்து தொடங்கின என்று தேடுபவர்களுக்கு ஒரு டைரி போல இக்கட்டுரைகள் உதவக் கூடும். தவிர ஒரு மர்ம நாவல் போன்ற சுவாரஸ்யத்தை...
இளம்பரிதி இணையத்தில், அதுவும் குறிப்பாய் முகநூலில், அழகுத் தமிழில் பல கட்டுரைகளும், கவிதைகளும், பாடல்கள் குறித்த கட்டுரைகளும் எழுதப் படித்திருக்கிறேன். அதுவும் பெயருக்கேற்ப இளம் வயதிலேயே, இந்தத் தலைமுறைக்கு அதிகம் பரிச்சயமில்லாத பழைய பாடல்களையும்,...
“இந்த நாவல் எழுதுவதற்கு முன் ஒரு முடிவு செய்தேன், எனக்கென்று நான் வைத்திருக்கும் புரிதலை நான் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் யாருடைய மனமாவது புண்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் ஊசிமுனை...
நான் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் ரசித்து உணர்ந்த பாடல்களின் வரிகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த ‘மடை திறந்து’. ஒரு கவிஞனின் எழுத்தை ஆராயாமல் அப்படியே ரசித்து விடுவது ரசனை, அதனை ஆராய்ந்து...
“தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள்; நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்த பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும். ஒரு பெண் அழகாக...
இணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும், மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்குவதும் இன்றைய கலாச்சாரமாக இருக்கிறது. தவறில்லை. ஆனால் அதே சமயம் நாம்...
சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவராய் ஜெர்மனி வந்த என் அப்பாவின் வரலாற்றுப் பயணத்தில், தமிழர்களுக்கான மிக முக்கிய அறிவியல் எழுத்தாளரான மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் உருவாகிய காலத்திலிருந்து அவர்கூடவே நானும் பயணித்திருக்கிறேன். அவரின்...
பெண் என்ற அடையாளத் தன்னிலையின் சொற்கள் இவை. காதலின் மென் உணர்வுகளைப் பேசும்போதும் சமூகத்தைப் பேசும்போதும் அந்த அடையாளத்திலிருந்து அதற்கான விடுதலை அரசியலில் இருந்தே பேசுகிறார் ஜான்சி ராணி. ஒருவகையில் இது மிகுந்த சமகாலத்தன்மையுடையது....
காதலிக்க மறுத்த பெண்ணை, காதலில் இருந்து விலகிய பெண்ணை, கத்திக்குத்து, கொலை, திராவகம் வீச்சு, என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம். அன்பின் உச்சம், வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும். அளவில் சிறியதோ...
ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் தொடங்கி மனிதகுல போராட்டமே வடிவமைக்கப்படுகிறது. கதை, கவிதை, நாவல் என முத்துவேலுக்கு அவனது வலுவான தோள்களில் இடியெனச் சரிந்த அவமானத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட, பசியுமான துயர் மிக்க வாழ்க்கையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம்....
அம்மாவின் கைப் பிடித்துக் கொண்டு திருவிழாவுக்குச் செல்லும் குழந்தையைப் போலத்தான் இந்தக் கவிதைகளைப் பற்றினேன். இப்போது வேதாளம் போல முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு வாழ்வின் மீதான கேள்விகளை எழுப்பிக் கொண்டும், வாழ்வின் புதிர்...