ஒற்றைப் போராக கண்முன் சித்தரிக்கப்படுவதன் வேர்களில் உள்ள முடிச்சுகளை தொட்டு எழுதி வரும் வாசுமுருகவேலின் அரசியல் பார்வை எழுத்தில் பூடகமாவே வெளிப்படும். ஆனால் இந்நாவலில் வெளிப்படையாகவே வருகிறது. நாவலில் சுட்டப்படும் தரப்புகளை விவாதிக்கலாம் மறுக்கலாம்....
அகரமுதல்வனின் எழுத்துக்கள் சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குமுறல்கள். ஆத்திரங்கள். நீதியும் அறமும் பேசும் உலகை நோக்கி எள்ளலுடன் உமிழும் எச்சில் துளிகள். சராசரி இளைஞனுக்குரிய இயல்பான வாழ்வு மறுக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் போரின் மூர்க்கக்...
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.
2001 இன் பின்னான நிகழ்வுகளின் காலக்களத்தைக் கொண்டிருப்பதாலேயே “கனவுச் சிறை”யின் தொடர்ச்சியாக இந் நாவலைக் கொண்டுவிடக் கூடாது. “கனவுச் சிறை”கனவுகளற்ற இலங்கைத் தமிழ் மக்களின் போர்க் கால அவலங்களைச் சொல்லியது. அரசியல் பின்னணியிலிருந்து நாவலின்...
காக்கா கொத்திய காயம், ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள உங்களை...
கர்ணனுடைய இரண்டாவது தொகுப்பாகிய சேகுவேரா இருந்த வீடு, அவர்மீதான விமர்சனங்களுக்கு ஓரளவுக்குப் பதிலாக வந்திருக்கிறது. மொத்தம் பதின்மூன்று கதைகள் இதிலுண்டு. ஏறக்குறைய ஏழுகதைகள். அவரை அதிகாரத்தின் ஒரு அடுக்கை மட்டுமல்ல. எல்லா அடுக்குகளையும் எள்ளிநகையாடுபவராக...
நவீன கிட்லர்களின் கீழ் அடக்குமுறையாளர்களின் கீழ் இராணுவ ஆட்சிகளில் கூட ஆளும் வர்க்கத்துடன் மௌனமாய் உடன்பட்டவர்களாலோ தத்தம் வேலையைப் பார்த்தவண்ணம் கடந்து செல்பவர்களாலோ அன்றி தமது வரையரைகளுக்குள்ளும் தமக்கு நியாயமெனப் பட்டதை செய்பவர்களாலேயே மனித...
வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள் இதுவரை ஈழத்தில் மிகவும் சொற்பமாகவே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழ...
இலங்கையைக் கடவுள் படைத்தார். இந்தச் சிறையை பிரிட்டிஷ்காரர்கள் படைத்தார்கள். இதுவரையான இலங்கை வரலாற்றிலேயே அதிக வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் பெண் நான்தான். விடுதலையாகி வெளியே வரும்போது எனக்கு முந்நூற்று இருபத்தியிரண்டு வயதாகியிருக்கும். சுக்கிராச்சாரியாரின்...
ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த கொடூர பயணங்கள், இவற்றிற்கு...