பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும்,...
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது.
புத்தகத்தின் தலைப்பைத் தாண்டியும் புனைவாக்கம் தொடர்பான பல விஷயங்களை பேசுகிறது. வெறும் உத்திகளாக மட்டுமே பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த பல புனைவாக்கக் கூறுகளையும் பரிசோதனை மாதிரிகளையும் புனைவு வரலாற்றோடும் சமகால சமூக இயக்கத்தோடும் பொருந்திப் புரிந்துகொள்ள வேண்டுகிறது.முப்பதாண்டு...
உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, பல இடங்களில் தோண்டி...
மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழுந்த பரபரப்புகளும் கண்டனங்களும் இன்று சரித்திரமாகிவிட்டன. சாகித்ய அகடமி பரிசு பெற்ற இ.பாவின் இந்நாவல் ஆங்கிலம்,...
இடது சாரி இயக்கங்களோடு தன் நாற்பது வருடங்களை கரைத்திருக்கும் பவா அதில் கண்டடைந்த தன் மேய்ப்பர்களாக பல உன்னதமான கலைஞர்களை, பெரும் ஆளுமைகளை, பேச்சாளர்களை, ஓவியர்களை, நாடகக்காரர்களை களப்பணியாளர்களை நம் முன் கட்டுரைகளுக்கும் மேலான...
எந்தக் கவிஞனும், எந்தக் கலைஞனும் அவனுக்கான முழு அர்த்தத்தை அவன் மட்டுமாகப் பெறுவதில்லை. அவனுடைய முக்கியத்துவம், அவன் பற்றிய மதிப்பீடு என்பது, அவனுக்கும் மறைந்த கவிஞர்கள்,கலைஞர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மதிப்பீடு தான். தனியாக...
சூஃபியிஸம் என்பதை அன்பை முக்கியமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாம் எனப் புரிந்துகொள்ளலாம். சூஃபிகள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே இருக்கும் மதங்களோடு ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள். அவர்கள் மதங்களைவிட மனிதர்களையும் அன்பையும் பிரதானமாகப் பார்த்து அதன்படி தங்கள்...
“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய் நான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன் நேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய் என் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு விட்டுப்...