புராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில்,...
இதுவொரு தலைமுறையின் கதை. குடும்பமொன்றின் சிதறல்களின் வழியாகத் தனிமனிதன் ஒருத்தனை முன்னிறுத்தி விரியும் இந்நாவல், அவனைப் போலவான மனிதர்கள் யாவரையும் ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கிறது. வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. அக்கோட்டின் மையத்தில்...
பெண்களின் உணர்வுகளை இந்த அளவிற்கு எளிமையாகவும், தெளிவாகவும் பதிந்த யதார்த்த நாவல் சமீபத்தில் இதுதான் என்றே தோன்றுகிறது. உமா மகேஸ்வரி ஒரு கவிஞர் என்ற முறையில் மொழியையும் பெண் என்ற வகையில் பாத்திரங்களின் உணர்வோட்டத்தையும்...
நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது....
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது. அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இத்தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால்...
அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற, அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித்துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள் குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய் உணரும் கணத்தில் என்னவாக மாறுகிறான்? இந்த ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று...
மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது....
சுஜாதா style Thriller கதை. அதன் கருக்களம் எல்லாமே பெங்களூரை சுற்றியே நடக்கும். பேர் தெரியாத பிரபலமான ஆங்கில புத்தகம் மற்றும் கதாசிரியர்களை அறிமுகபடுத்துவார். ஜாவா, கோபால், பைனரி என்று கணினி சம்பந்தப்பட்ட வார்தைகள்...
பொறாமை வெற்றியாளனிற்கான மரியாதையால் அழகாக மூடிமறைக்கப்பட்டது என்ற வார்த்தைகள் மூலம் அம்பரய எனும் சுமனேவின் வாழ்வு இழப்பிலிருந்தும் அலைச்சலிலிருந்துமே தொடங்குகிறது. அச்சிறுவனின் ஆகப்பெரிய கனவுகள் சந்தர்ப்பங்களைத் திசைமாற்றுகிறது. பழிவாங்கப்பட்ட மனநிலையால் அவன் அலைவுறும் வாழ்க்கையில்...
ஒரு புத்தகம் என்பது ஒரு அனுபவம். அம்பறாத்தூணி என்ற இந்த நூலில் கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் பதினைந்து சிறுகதைகளும் பதினைந்து அனுபவங்கள். பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தோராம் நூற்றாண்டு, முப்பத்தோராம் நூற்றாண்டு என பல்வேறு காலங்களில் இந்த...
பிரபு கங்காதரனின் ‘காளி’ தொகுப்பு தமிழில் இதுவரை பேசியிராத தாந்த்ரீகப் பாலியல் பற்றிப் பேசுகிறது. இந்தத் தொகுப்பு தமிழ்க் கவிதை உலகில் பல நூற்றாண்டுகள் பேசப்படும். – சாரு நிவேதிதா
ஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்றம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன. – எஸ். சண்முகம்
இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி, நுணுக்கமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை. அயோத்திதாசர் தனி மனிதரல்ல, ஒடுக்கப்பட்டவர்களின் சுயம். அடையாளமற்றவர்களின் ஆவேசம்....
எந்த பிம்பமும் இல்லாத நவீன மனதின் நேரடியான எழுத்து… புனிதத்தால் கட்டமைக்கப்பட்ட பொய்களை எளிமையாக உடைந்து உண்மையை உணர்த்துபவை . நான் எழுத முடியாமல் இருக்கும் பல உண்மைகளைச் சொல்பவை . ஆண்களுக்கு சிரிப்பையும்...
‘அர்த்தநாரி’யை எழுதும்போது பெரும் சுதந்திர மனநிலையில் இருந்தேன். என் மனமும் கைகளும் வெகு இயல்பாக இணைந்தன. அதன் வெளிப்பாடுகளை இதில் பரக்கக் காணலாம். இன்றைக்கு நாம் வாழும் வாழ்வில் இத்தனை சுதந்திர மனநிலை கூடாதோ...
ஒரு எழுத்தின் வெற்றி என்பது வாசகனைத் தன்னை அந்த எழுத்தில் தேடவைப்பதில் உள்ளது. இதில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவருக்குமான அடையாளங்களுடன் நிரம்பி உள்ளது அல்லிக்கேணி. அல்லிக்கேணி வாழ்வின் பகுதிகள் திருப்பு முனைகளும்...
என் கதைகளில் எந்தத் தவறுமில்லை.தவறு என்று சொல்லப்படுகிற அனைத்தும் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால்,நம் காலத்தைத் தாங்கிக் கொள்ள உங்களால் முடியவில்லை என்றுதான்...
அனிதா – இளம் மனைவி, குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு...
இந்தியர்களாகிய நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? நம்முடைய முன்னோர்களைப் பற்றிய கதையை நமக்குச் சொல்வதற்காக, பத்திரிகையாளர் டோனி ஜோசஃப், வரலாற்றின் ராஜபாட்டையில் 65,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளார். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற...
ஹுசைனி தன்னுடைய எழுத்துலகப்பிரயாணத்தைத் தன் நாட்டின் ஆண்கள் குறித்து எழுதி துவக்கியிருக்கிறார் என்றாலும் ஒரு நாவலாசிரியராக அவருடைய முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்திருப்பது ஆஃப்கானிஸ்தானின் பெண்களின் நிலையே. – தி டைம்ஸ் ‘பெண்களுக்கு வாழ்க்கை என்னவாக இருக்கிறது...
‘மாதொருபாகன்’ முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும்...