இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக்...
சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்தத் தேடலில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், கண்போலப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தார்த்தன்...
இந்திய பூமியில் ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும் பதித்துச் சென்ற தடங்களின் தொகுப்பு நிகரற்றது. இந்தியப் பாரம்பரியத்தையும் மரபையும் பண்பாட்டையும் தொகுத்து நமக்களித்தவர்கள் இந்த யதிகளே. அவர்களது வாழ்வு வினோதமானது. ஒரு கால் உலகத்திலும் இன்னொரு...
இந்தக்கதை 1940களில் இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகளால் கைது செய்யப்பட்டு கான்சென்ட்ரேஷன் கேம்ப்களில் அடைபட்ட மனைவி, மூத்த மகள், மகன்களை விட்டுத் தப்பி ஓடி இந்தியாவின் பெங்களூரில் வந்து தஞ்சம் புகுந்த அப்பா மற்றும்...
மாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள ‘ரசவாதி’ நூல், நவீன காலத்தின் செம்மையான நூல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. பல கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூல், பல தலைமுறைகளைச் சேர்ந்த எண்ணற்ற வாசகர்களின்...
கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும்...
சமீப காலமாய் விரும்பி வாசிக்கும் படைப்பாளிகளில் ஒருவர் ஜி. கார்ல் மார்க்ஸ். அவரது முதல் சிறுகதைத்தொகுப்பு “வருவதற்கு முன்பிருந்த வெயில்”நன்னம்பிக்கை பெறுவதாக இருந்தது. “ராக்கெட் தாதா” என்ற இந்த இரண்டாம் தொகுப்பு காதாசிரியனின் தீர்மானமான...
புனைவின் எண்ணற்ற சாத்தியக் கூறுகளைப் பிரமிக்கவைக்கும் விதத்தில் பயன்படுத்தும் வெங்கேடேசன் தமிழ்ப் புனைகதை உலகில் புதிய பிரதேசங்களை சிருஷ்டித்துக் காட்டுகிறார். பன்முக வாசிப்பை சாத்தியப்படுத்தும் இவரது எழுத்து தமிழில் இதுவரை புழக்கத்தில் இருந்துவரும் புனைவின்...
அதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா. மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால்...
இது உணவைக் குறித்த நூல் அல்ல. ருசியைப் பற்றியது. ஓர் உணவுத் தீவிரவாதியாக இருந்து, ஒரு நாளில் ஐந்து வேளைகள் உண்டுகொண்டிருந்தவன், ஒருவேளை உணவிருந்தால் வாழ்ந்துவிட முடியும் என்று தேர்ந்து தெளிந்த வரலாறு ஓர்...
எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற...
செறிவான ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கனவுகளின் உண்மை நிலை குறித்துப்பேசுவன இக்கவிதைகள் ஒருமிக்காத பிம்பங்களும், அவற்றின் விளைவுகளும் தொடர்ச்சியாக மற்றும் வித்தியாசமான சேர்க்கைகளில் தங்களை ஒன்றிணைத்து எழுச்சி வடிவங்களாக உருப்பெறுக்கின்றன நரனின் கித்தானில் (அல்லது) பிம்பவெளியில்...
‘ஆட்டோசந்திரன்’ அவர்கள் எழுதிய ‘லாக்கப்’ நூலின் சிறை அனுபவங்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் ‘விசாரணை’ திரைப்படமாக எடுக்கப்பட்டு, இத்தாலி நாட்டின் 72 வது வெனிஸ் உலக சினிமா விழாவில் சிறந்த சினிமாவுக்கான ‘மனித உரிமை...
வட்டூரின் சமூகம் கலை பன்பாடு ஆகியன சமூக வரலாற்று நிலைகளுக்கு ஏற்ப மாறியவிதம் கலை நுட்பங்கள் அதற்கு பங்களித்தவர்கள் பற்றிய ஆய்வாக விரிகின்றது அரங்கை எழுதுதல் என்பது சமூகத்தையும் எழுதுதல் என்றானது ஆய்வில் தவிர்க்க...
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு...
மரணத்திற்கு மிக அருகில் சென்று மீண்டெழுந்தவர்களின் கதைகள், நம் வாழ்விற்கு வெளிச்சமூட்டுபவை. எதிலிருந்தும் திரும்பிவரலாம் என நம்பிக்கை அளிப்பவை. மனுஷ்ய புத்திரனின் ‘வாதையின் கதை’ சிகிச்சைகால அனுபவங்களை கவித்துவ நோக்கில் விவரிக்கும் தொகுப்பு. சிகிச்சையின்...
கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் இந்த எழுத்துகள் தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா...
ஜார்ஜ் ஆர்வெல் (இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளெய்ர்), 17 ஆகஸ்ட் 1945-ல் வெளியிட்ட நூல் அனிமல் ஃபார்ம் (விலங்குப் பண்ணை). படிப்பவர் அனைவருமே இது யாரைப் பற்றியது, எதைப் பற்றியது என்று சட்டென்று உணர்ந்துகொண்டுவிடுவார்கள்....
ஆங்கில, அமெரிக்க, பிரெஞ்சு, ருஷ்ய, சீன, ஜப்பானிய, கிரேக்க, இந்தியக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் நுண் உணர்வு மிக்க சிறப்பான தமிழாக்கம் இந்நூல். படித்து ரசித்தபோது கிளர்ச்சியூட்டியவையும் மொழிபெயர்க்க உகந்தவையுமான கவிதைகள் மட்டுமே, அவற்றின்...
ரேமண்ட் கார்வர் அமெரிக்கச் சிறுகதையாளர். நசிந்துபோயிருந்த யதார்த்தவாத சிறுகதை மரபைப் பெரும் வீச்சுடன் மீண்டும் உயிர்ப்பித்தவர். எளிமையான சித்தரிப்பும் அலட்டலில்லாத மொழிநடையும் வாசிப்பில் எவ்வளவு ஆழங்களையும் சாத்தியங்களையும் உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியவர். உலக...
ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று “வெண்ணிறக் கோட்டை”. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி “கிழக்கிலிருந்து...
இருபத்தொராம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்த காலகட்டம் சமூக, பண்பாட்டு வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும் சிதைவுகளையும் இத்தொகுப்பில் உலா கவிதைகள் பேசுகின்றன. மனுஷ்ய புத்திரன், நவீன மனித இருப்பில் நிகழ்ந்திருக்கும் அபத்தங்களின்மீது...
கர்நாடகாவின் பெல்காம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகள் என இந்த நாவல் காட்டும் உலகம் சற்றே அந்நியமானது. வழக்கமான கதை சொல்லல் பாணியிலிருந்து சற்றே விலகி, தனக்கான வடிவத்தை தானே அமைக்க...
கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன். தமிழில் பெரும்பாலான...
எண்ணங்களின் தொகுப்பும் தொடர்ச்சியும் நம் மனசு செய்யும் காரியம். எண்ணங்களற்ற ஏகாந்த நிலையில் ஞானம் பிறக்கும் – யாதொரு முயற்சியுமின்றி யாதொரு செயலுமின்றி இது எப்போது நிகழும்? யாருக்கும் தெரியாது. இந்தத் தருணம் மட்டுமே...
ராபர்ட் மேனார்ட் பிர்சிக், மினஸோட்டாவில் உள்ள மினியபோலிஸில் 1928ல் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளர், மற்றும் தத்துவவாதி. ஒன்பது வயதில் இவருடைய ஐ.க்யூ. 170ஆக இருந்ததாலிவர் பல வகுப்புகள் படிக்காமல் 1943ல் உயர்நிலைக்கல்வி பட்டயம்...