அசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் “கரைந்த நிழல்கள்”நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று. தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதி பகுதியாகவும்இ நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு...
புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீரா நதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம்....
பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டி கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் “கழிமுகம்” பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச்...
• ஆனந்த விகடன் விருது – 2020 சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் பத்து வெவ்வேறு நாட்டு கவிஞர்களின் கவிதைகள், கவிஞர்கள் பற்றிய சிறுகுறிப்புடன். வழக்கமான அனுராதாவின் புத்தகம். மேலும் நம்மை சுழலுக்குள் இழுக்கும் கவிஞர்கள். வெவ்வேறு...
நாம் காணும் கனவுகளைப் புரிந்து கொள்வதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படையைக் கண்டடைந்தவர் உலகப் புகழ்பெற்ற அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். ‘கனவுகளின் விளக்கம்’ என்ற இவரது பிரசித்தி பெற்ற நூலின் சுருக்கமான வடிவம் இது.ஃப்ராய்ட் ஆய்வின்...
தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது. முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்,...
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை...
தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக...
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் “காதுகள்” என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன்...
சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும்...
நம்மைச் சார்ந்தவர்களின், நம்மை விட்டுப் பிரிந்தவர்களின் ஞாபகம் ஏதோவொரு பழைய பாடலில் நிச்சயம் புதைந்திருக்கும். பல ஞாபகங்கள் கொண்ட பழைய பாடல்கள் அனைத்துமே பாதுகாக்கப்படவேண்டிய ஞாபகப் பேழை. அந்தப் பேழையிலிருந்து நூறு பாடல்களை இந்தப்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல்...
ஆயிரம் பேருக்குச் சமைக்கும் இந்தக் கலைஞர்களின் அன்றாடத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாக குடிக் கலாச்சாரம் பின்னிக்கிடப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நாவல். உரையாடல்களால் ததும்பி வழியும் ஒரு பாதையில் இந்நாவல் பயணிப்பது வாசிப்பை இலகுவாக்குகிறது....
முப்பது வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தால் எரிந்து கொண்டிருந்தது இலங்கை. யுத்தம் முடிந்து இப்போது பதின்மூன்று வருடங்களாகின்றன. ஆனால் யுத்தகாலத்தில் கூட ஏற்படாத பொருளாதாரப் பேரவலத்தை இலங்கை சந்தித்து வருகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள்...
கூளமாதாரி, பண்ணையாட்களாக வேலை செய்யும் தலித் சிறுவர்களின் வாழ்வை அவர்களின் பார்வையினூடாக விவரிக்கிறது. பதின்பருவத்தின் அவர்கள் இல்லாமை, அதிகாரம், சுயநலம், தீண்டாமை முதலியவற்றின் பிடிகளுக்கு உட்பட்டும் உயிரியல்பான அன்பு, காதல், காமம் உள்ளிட்டவற்றின் மலர்ச்சிக்கு...
காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு...
நாம் தற்போது பயன்படுத்தும் கேலிச்சித்திரம் அல்லது நையாண்டிப் பொருள் கொடுக்கும் ‘கார்ட்டூன்’ சொல் பயன்பாட்டை பிரிட்டிஷ் பத்திரிகை ‘பஞ்ச்’ தொடங்கியது என்று சொல்கிறார்கள். 1843இல் பார்லிமெண்ட் கட்டிடம் தீக்கிரையானபோது அதன் புனரமைப்பின் தருணத்தில் பிரிட்டிஷ்...
தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிறது.
ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய் , ஆழம் புதைந்து கிடக்கும். உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது. பாசத்திற்கும், அன்பிற்கும், பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே...
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன்...
நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘கௌரவன்’ துரியோதனன். இந்த இரண்டாம் பாகத்தில் –...
மலையாளத்தின் சிறந்த கதாசிரியர்களுள் ஒருவரான பால் சக்காரியா வெவ்வேறு காலங்களில் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு நுட்பமான வாசகனால்கூட இக்கதைகளை வரிசைப் படுத்திவிட, முடியாதபடி காலத்தை மீறி நிற்கும் படைப்புகள் இவை.