எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அந்தச் சமுத்திர முயற்சியின் ஒரு துளிதான் இந்தத் ”தண்ணீர்...
போலி கவிசாகசப் பாவனைகள் தவிர்த்து, வாழ்வனுபவங்களின் அதன் மீச்சிறு தருணங்களின் மீதான அவதானிப்புகள் வழியே எளிமையாகப் பிறக்கும் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன. கவிதைகளின் காட்சிகளில் குரல்களில் பொருண்மைகளில் தொனிக்கும் உணர்ச்சி மிகுதி அதன் பலமும்...
தரைக்கு வராத இலைகள் அந்தரத்தில் மிதக்கும்போது, அவை உதிர்ந்த கிளைகளும் அவை தொட இருக்கிற பூமிக்குமிடையே பல்லாயிரம் மைல்கள் என விரிகிறது இப்பெருந்தனிமை. இருபத்தோராம் நூற்றாண்டில், மனித மனம் அடையும் கலாச்சாரத் தனிமையும் மனித...
வ.கௌதமனின் ‘மகிழ்ச்சி’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. குமரி மாவட்டத்திலுள்ள இரணியல் செட்டியார் என்ற ஒரு சமுகத்தின் சமுக, கலாச்சார வாழ்வை வெகு விஸ்தாரமாகச் சொல்கிறது. “தலைமுறைகள்”. “திரவி” என்ற திரவியத்தின் பார்வையில்...
பல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன் ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி...
தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைக்கதை வரலாற்றில் இப்படி ஒரு...
சதா நினைவுகளில் திளைத்துக் கொண்டிருக்கும் மனதிலிருந்தே இக்கதைகள் பிறந்திருக்கின்றன. ஆசை, ஆசையின்மை வெற்றி, தோல்வி இருப்பு, இன்மை என மாறி, மாறி புனைவின் விசித்திர விளையாட்டினை நிகழ்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நிகழ் வாழ்க்கையின் விசித்திரங்களை விசாரணை...
இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை...
அலைந்து திரியும் ஒருவன் தற்செயலாய் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றான். அவளின் மர்மம் நிறைந்த பின்புலம் அறியாமலே அவளோடு தென்கிழக்காசியா சுற்றித் திரியத் தீர்மானிக்கின்றான். இப் பயணத்தின் தூண்டலால் அவனுக்குள் கட ந்த கால நினைவுச்...
அன்பின் வழிமுறைகள் ஏன் இத்தனை பதட்டமுடையதாக இருக்க வேண்டும்? அதில் ஏன் துடைத்துத்தீராத கண்ணீர் துளிகள் துளிர்த்தவண்ணம் இருக்க வேண்டும்? காதலின் அனல்மூச்சுகளில் நம் இதயத்தின் பாறைகள் உருகும்போது பெருகும் வெள்ளத்தில் நாம் பற்றிக்கொள்ள...
முன்னாள் இந்நாள்என்றெல்லாம் இல்லைகாதல் எந்நாளுக்குமானதுஉனக்கும் எனக்குமானஇந்தக் கால இடைவெளிஊதினால் பறந்துவிடும் தூசிப்படலம்.என்றைக்கானாலும் சரிநீ வந்து முன் நின்றால்என் ஆணிவேர் அசையும்ஏற்றிவைக்க மட்டுமே வழியுள்ளகாதலின் பீடத்தில்நீயே ராணி.
பரந்து விரிந்த அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஐம்பத்தைந்து வயது பிந்த்தா ஜுபைரு -ஐந்து குழந்தைகளின் பாட்டி- கரப்பான் பூச்சிகளின் நெடி படர்ந்த அதிகாலையில் கண் விழித்தபோது தவிர்க்க இயலாத தீய சம்பவம் ஒன்று...
கல்லூரிக்குப் போகிற பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, சுவாரஸ்யமான நாவலாகத் தந்திருக்கிறார் சுஜாதா.
கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும்...
“நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த...
மீட்சியே இல்லாததொரு பாவப் பிரதேசத்தில் வாழச் சபிக்கப்பட்டவனின் கதை. பர்மா பஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவல் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறது. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக்...
அப்படியே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றை விடவும் கூடுதலாகச் சொல்கிறது. அந்த மனிதர்கள் நீங்களும் நானும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். ஆயின், நாம் எதைப் பேசாமல் இருக்கிறோமோ அதை எல்லாம் அவர்கள்...
தேரி காதை பௌத்தப் பிக்குணிகளின் பாடல் தொகுதி. புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு புத்தர் மறைவிற்குப் பின் தொகுக்கப்பட்டது. 1905இல் திருமதி. ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்....
“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை...
சொற்களுக்கான பொருள்களை அறிந்து கொள்வதில்தான் படைப்பிற்கான வளர்ச்சி அடங்கியிருக்கிறது. தொல்காப்பியர் காலம் தொட்டு தமிழ் இலக்கிய உலகம் சந்தித்திருக்கிற சொற்களை இந்நூலாசிரியர் கலைச்சொற்களாகப் பயன்படுத்தி எழுதியிருக்கிறார். இது தற்கால வாசகர்களுக்கு, இன்மையைத் தேடி ஓடுவதைப்...
இந்த வாழ்வின் இயக்கம், அதன் இடையறாத முன்னகர்வு தொடர்ந்து வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. கானகம்போல தவிர்ப்பதற்கு இயலாத ஒரு அழைப்பை வாழ்க்கையின் குரலில் உணரமுடிகிறது. இம்சை, காயம், வலி, முனகல், நம்பிக்கை, உற்சாகம், பிரகடனம், இசை,...
இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு. நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது “தோட்டியின் மகன்”. தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய...
ஒரு நூலகம்! பல ஜென்மங்கள்! வாழ்க்கையும் மரணமும் கைகுலுக்கிக் கொள்கின்ற இடத்தில் ஒரு நூலகம் இருக்கிறது. இந்நூலின் கதாநாயகி நோரா அந்த நூலகத்திற்கு வந்து சேர்கின்றபோது, தன் வாழ்க்கையின் சில விஷயங்களைச் சரி செய்து...
பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள்,...