இந்தத் தொகுப்பில் உள்ள ஏழு கதைகளும் வெவ்வேறு தலைச்சிறந்த லத்தீன அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு. இரண்டாம் உலகப் போரின் பிந்தைய காலகட்டத்தின். எழுச்சியூட்டும் எழுத்தாகக் கருதப்படும் இவர்களின் எழுத்து வடிவம். வழக்கமான கதைகளின்...
தந்திரங்களின் குவியல்… திரு.பிரவுன் ஒரு முழு நீள புத்தகத்திலும் அவற்றை சுத்தமாக வேட்டையாடியிருக்கிறார். – ஜேனட் மஸ்லின், தி நியூயார்க் டைம்ஸ் கோடைக்கால பிளாக்பஸ்டர் சினிமாப்போல் வந்திருக்கும் இதில், இதுவரை இருப்பதிலேயே வலுவான கதாபாத்திரமாக...
தி. ஜானகிராமன் ‘கணையாழி’ இதழில் தொடராக எழுதி, அவரது மறைவுக்குப் பின்னர் நூல் வடிவம் பெற்ற நாவல் ‘நளபாகம்.’ அவரது நாவல்களில் மையப்பொருளை அவ்வளவு வெளிப்படையாக உணர்த்தாத நாவலும் இதுவே. இந்தப் பூடகமே நாவலை...
இமயமலை பயணத்தினூடே அராத்துவின் நள்ளிரவின் நடனங்கள் படிக்க நேர்ந்தபோது மிரண்டு விட்டேன். ஒரு Charles Bukowski கதைக்கு நிகரான கதை இது. சமகாலத்திய தமிழ் இலக்கியத்தின் நிலையை எண்ணினால் சோர்வே மிஞ்சுகிறது. யாருக்கும் வாசகனைத்...
சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக்...
தமது திருமண உறவு சிதைந்துபோன நிலையில், ஒரு சீன எழுத்தாளர் திபெத் நாட்டுக்குப் பயணம் செல்கிறார். அங்கே இருக்கும் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் வேளையில் அவருக்கு, ஒரு விண்ணடக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டுகிறது;...
இருத்தலை ஊதி இடம் நகர்த்தும் காற்றின் பாதை மெல்ல நகர்கின்றது அந்தரமான வாழ்வின் இரேகைகள் அடங்கிய இரகசியங்கள் அறிப்படாமலும் புரியப்படாமலும் தரை மோதியே அழிகின்றன காற்றை விழுங்கிய வளிக்குமிழிக்குள் எவ்வளவு காற்று மூச்சுத் திணறியிருக்கும்...
ராணுவம் தனியார்மயமாக்கப்படுவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தனியார்மயமாக்கப்படுவது ஆகியவை இன்று சர்வசாதாரணமாகிவிட்டன. இவை எங்கிருந்து தொடங்கின என்று தேடுபவர்களுக்கு ஒரு டைரி போல இக்கட்டுரைகள் உதவக் கூடும். தவிர ஒரு மர்ம நாவல் போன்ற சுவாரஸ்யத்தை...
நாவலின் கதாபாத்திரங்களும் காலமும் அரண்மனைகளும் குதிரைகளும் எத்தனை எழுதினாலும் விவரித்தாலும் விரிவு கொள்ளவும் கதை சொல்லவும் காத்துக்கொண்டிருக்கின்றன. தன்னை மீண்டும் ஒரு புனைவுகுள்ளும் மீண்டும் ஒரு தனத்திர்க்குள்ளும் அனுமதிக்கும் ஒரு படைப்பு நிச்சயம் எக்காலத்திற்குமான...
முன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல, சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன். இந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும்...
“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவனுக்காகக்...
உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த நாவலில் முன் வைக்கிறார் சுஜாதா. சந்தோஷம், துக்கம், பரவசம் என்று எந்த மாதிரியான உணர்ச்சிகளையெல்லாம்...
ஒரு ஊழிக் காலத்தின் பாடல்களை எந்த விதமான பாசாங்குகளுமற்ற மொழியில்ப் பாடிப் போயிருக்கும் இக் கவிதைகள் எழுதப்பட்ட மொழிக்குரிய மக்களுக்கு மாத்திரம் உரியதல்ல. உலகமெங்கும் அதிகாரங்களின் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் எல்லா மனிதர்களுக்கும் உரியது....
ஆங்கிலத் திரைப்படங்களின் தீவிர விரும்பியான அவர், கதையின் போக்கை அவ்வாறே நகர்த்தியிருப்பது மனப்பதிவுகளின் மீள் என்றே கருதுகிறேன். புகைப்படக் கலைஞராக இயங்குவதிலிருக்கும் நுட்பம் கதையை காட்சிகளாக நகர்த்துவதில் அவருக்கு எளிதாக கைவந்திருக்கிறது. சாரைப்பாம்பின் சரசரப்போடு...
“நேர நெறிமுறை நிலையம்’, துருக்கிய மொழியில் பதிப்பிக்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்குப் பிறகுதான் உலகின் பரந்த பார்வைக்கு வந்திருக்கிறது. இன்றைய நவீன அதிகார வர்க்க அரசுகளின் இலக்கற்ற ஆட்சிமுறையை நையாண்டி செய்யும் இந்நாவல் ஒரு விசித்திரமான கற்பனைக்...
பண்டைய எகிப்தியர் வாழ்வு, லக்சர் கோவில், மண்மூடி மறைத்த புனிதத்தலம், வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம், மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள், எகிப்திய வரலாறு, பெண்ணரசி, நைல்நதியில் சீசருடன் இணைந்த கிளியோபாட்ரா, பாலஸ்தீன இஸ்ரேலிய...
மழையற்ற ஒரு நாளில்தான் இப்புத்தகமும் நிறைவு பெறுகிறது. நீண்ட நாட்களாய் ஒரு துளி மழைக்காய் காத்துக்கிடக்கிறோம். அவள் இரக்கமற்றவள். இப்புத்தகத்தை அச்சுக்கு அனுப்புவதன் மூலம் நானும் அவளை இன்று இரக்கமற்று நிராகரிக்கிறேன். -பவா செல்லதுரை
இக்கதைகளை படிக்க நேர்ந்த வாசகர்கள், தங்கள் மொழியிலும் சிறந்த படைப்புகளைத் தேடிப் படிப்பர். இக்கதை மாந்தர்களின் உணவு எந்தச் சமையல் அறை வாணலிகளிலும் வலுபட்டதாய் இல்லை. அலைந்து திரியும் வேர்களைக் கொண்டவர்கள். துரதிருஷ்டவசமாக இவர்கள்...
90-களின் ஆரம்பத்தில் பிறந்த ‘அனோஜன் பாலகிருஷ்ணன்’ இலங்கையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சமகால புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர். ஏற்கனவே ‘சதைகள்’ என்கிற சிறுகதைத்தொகுப்பு இலங்கையில் வெளியாகியிருந்தது. “பச்சை நரம்பு” பத்துக்கதைகள் அடங்கிய இவரது இரண்டாவது...
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான்....
அச்சங்களின் அழகைக் கண்டறிந்த ஒரே ஒரு திரைப்பட கலைஞர் ஹிட்ச்காக் தான். மர்மத் திரைப்படம் எடுப்பது மட்டுமல்லாது அச்சம் தரும் திகில் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதையும் தன் கலைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அவர்...
பூமியில் உயிரினம் எவ்வாறு தோன்றியது என்பதையும், உயிரினங்களுக்கு இடையே இன்று நாம் காண்கின்ற பரவலான பன்முகத்தன்மையை நாம் எப்படி அடைந்தோம் என்பதையும் இந்நூல் விவரிக்கிறது. இந்நூலில், பரிணாம வளர்ச்சியைச் சுருக்கமாகவும், எளிதில் புரிந்து கொள்ளத்தக்க...