திபெத்தியர்கள் சிறுகதைகளும் எழுதுவார்கள் என்பதையே திபெத்தைக் கடந்து இயங்கிய வெளியுலகம் அறியவில்லை. ஆகவே திபெத்தியச் சிறுகதை தன் முகைவிரித்தலின் அறிவிப்பே இந்த நூல் என்று நான் கருதுகிறேன். அந்த முகைவிரிக்கிற வெளிப்பாடும் கூட அபாயம்,...
“பள்ளிகொண்டபுரம்” நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த...
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான்...
பனைமரச்சாலை என்பது ஒரு போதகரின் பனை மேலுள்ள விருப்பத்தால் நிகழ்ந்த ஒரு புனித பயணம். தான் பணி செய்யும் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான நாகர்கோவில் வரை இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஒரு பயணியின்...
வைக்கம் முகம்மது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர். தீமை, சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடு குறிப்பாகக் கோமாளிகள், மடையர்கள், திருடர்கள், குற்றவாளிகள்...
இளம்பரிதி இணையத்தில், அதுவும் குறிப்பாய் முகநூலில், அழகுத் தமிழில் பல கட்டுரைகளும், கவிதைகளும், பாடல்கள் குறித்த கட்டுரைகளும் எழுதப் படித்திருக்கிறேன். அதுவும் பெயருக்கேற்ப இளம் வயதிலேயே, இந்தத் தலைமுறைக்கு அதிகம் பரிச்சயமில்லாத பழைய பாடல்களையும்,...
நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை...
சந்தித்தவைகளில் படிந்திருந்த சில துளிகளின் ஒளிக்கீற்றுக்களைத் தனியாகப் பிரித்தெடுத்து அதன் பிரமிப்பான ஒளிரும் தன்மைகளை உணர்த்த முயன்றிருக்கும் சொற்கள் இவை. வெறுமனே மனநெருக்கடிகளின் வழியே ஒரு நிர்பந்தமான உணர்வுகளை மட்டுமே உருவாக்கிட முயலாமல் அதன்...
படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் இருக்கின்றன. ஒரே படிமத்தை விளக்கமாக எழுதிய கவிதைகளும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே பேசிய கவிதை “காவியம்”. அதில் நான்கு வரிகளில் முழுமையான ஒரு படிமம் இருக்கிறது....
இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான, கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை...
எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக்கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த மொழி வடிவத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான மொழி வடிவங்களில் கதைகள் சீறிப் பாய்கின்றன. பித்துப்பிடித்த...
கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள பத்து கதைகள் அடங்கிய இத்தொகுப்பு தற்கால கன்னட இலக்கிய உலகின் போக்கை உணர்த்தக் கூடியதாக உள்ளது. மனித வாழ்வின் அவலங்களையும் குரோதங்களையும் ஏமாற்றங்களையும் நேருக்கு நேர் நின்று பேசக் கூடியவையாக இவை அமைந்துள்ளன....
புத்தம் வீடு, எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில்...
கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரீரியைப் போல் ஒலிக்கச்செய்ய லா.ச.ரா. கவிமொழியைத்தான்...
வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும்...
புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப்...
வாழ்வின் தனிமையை, அதன் பன்முக நெருக்கடிகளை – ஆழ் மனம் சார்ந்தும், புறச்சூழல் சார்ந்தும் – தீவிரத்துடன் அலசுபவை ஹாருகி முரகாமியின் படைப்புகள். அதேபோல, கிழக்காசிய மனித வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரத்தின் நிழல் படிவதை...
வாழ்க்கையின் எந்தப் பல் சக்கரங்களுக்குள்ளும் என் வேட்டி நுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கரை சார்ந்திருக்கிற உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும்.
“இந்த நாவல் எழுதுவதற்கு முன் ஒரு முடிவு செய்தேன், எனக்கென்று நான் வைத்திருக்கும் புரிதலை நான் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் யாருடைய மனமாவது புண்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் ஊசிமுனை...
பொ. கருணாகரமூர்த்தி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெர்லினில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியர். அவரது முன்னைய நினைவலையான ‘பெர்லின் இரவு’களின் தொடர்ச்சியாக வும், விரிவாக்கமாகவும் அமைவது இந்நூல். இயல்பான அங்கதம் தோய்ந்த நடையுடன்கூடிய இவரது...
கலையின் மீதான அவநம்பிக்கை மனிதர்களை பலவீனமாக்கும். ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும், வாழ்க்கைக் குறித்தான அர்த்தங்களையும் நுண்மையாக அணுகவும் புரிந்து கொள்ளவும் கலை வடிவங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றன. லட்சியங்களும் நோக்கங்களுமின்றி விட்டேத்தியாய்த் திரியும்...
நான் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் ரசித்து உணர்ந்த பாடல்களின் வரிகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த ‘மடை திறந்து’. ஒரு கவிஞனின் எழுத்தை ஆராயாமல் அப்படியே ரசித்து விடுவது ரசனை, அதனை ஆராய்ந்து...