நீண்ட இடைவெளிக்குப்பின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப்படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு தனித்து...
மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள், மனித நடத்தையிலும் மனித உறவுகளிலும் நிகழ்ந்திருக்கும் வினோதங்களைப் பற்றி உரையாடுகின்றன. நம் சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்களினூடாக, நாம் எவ்வாறு நமக்கே ஒரு கேலிச்சித்திரமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை...
பத்து வயதான அப்துல்லா தன் தங்கைக்காக எதையும் செய்வான். வறுமையும், போராட்டமும் நிறைந்த வாழ்வில், அவர்களைப் பராமரிக்க தாயும் இல்லாத நிலையில், அப்துல்லாவுக்கு மகிழ்ச்சியைத் தருபவள் பரி மட்டுமே. அவளுக்காக, அவள் பொக்கிஷம் போல...
வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரணமான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. எளிமை, நுணுக்கம், பூடகம் எனக்...
இலங்கை, இந்தியா, ஜேர்மனி, கனடா என்று பல தேசங்களை சுற்றிய அனுபவமும் அந்தந்த தேசத்து கலாச்சார உணர்வுகளும் கட்டுரைகள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. ஒரு தனிப்பட்ட நாட்டு அனுபவமாக இல்லாமல் இவர் சொல்லிப்போகும் விடயங்கள்...
லட்சியங்களும் நம்பிக்கைகளும் இல்லாத மானிட சமுதாயங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை. மானிடப் பரிணாமத்திற்கு இவை இன்றியமையாத ஊக்கங்கள்; பிடிமானங்கள்; அகவயமான உந்துதல்கள். இந்திய – தமிழகம் போன்ற பின்னடைந்த கலாச்சாரம்இ பற்றாக்குறையான அறிவியல்...
“தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள்; நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்த பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும். ஒரு பெண் அழகாக...
இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன. ஆனால் வெளிநாடுகளில் ஆவிகளையும் இதர மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள்...
பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால...
மாற்றம், குறுநாவல் வடிவத்தில் உள்ள ஒரு சுயசரிதை அல்லது சுயசரிதை வடிவத்தில் உள்ள ஒரு குறுநாவல் என்று விவரிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஆட்சி மாற்றங்களையோ தலைவர்களின் பட்டியலையோ சாராமல் ஒரு சமூகத்தில் தனக்கு நெருங்கிய மனிதர்களின்...
மிளகு, ஏலம் என்று வாசனைத் திரவியங்களைப் பிறப்பித்து, விற்பனைக்கு உலகச் சந்தையில் கொண்டு போய்ச் சேர்க்கும் இந்த இந்துஸ்தானத்துக் குறுநாடுகளோடு போர்ச்சுக்கல்லும் ஹாலந்து என்ற டச்சுநாடும் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்தன. முக்கியமாக...
பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. “பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…” என்ற அமர வரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளிய பிரயத்தனம் இது. அதிரப்பள்ளி...
அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான்...
தமிழுக்குப் புதிய கதைக் களங்களையும் கதை மாந்தர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் ஜே.பி.சாணக்யா, வாழ்வை தனக்கே உரிய பார்வையுடன் எதிர்கொள்கிறார். அனுபவத்தைக் கலையாக்கும் ரகசியத்தை அறிந்த இவர், தனது நேரடி அனுபவப் பரப்பிற்குள் வராத வாழ்வின் யதார்த்தங்களையும்...
கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற...
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின்...
கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில்...