ஒற்றைப் போராக கண்முன் சித்தரிக்கப்படுவதன் வேர்களில் உள்ள முடிச்சுகளை தொட்டு எழுதி வரும் வாசுமுருகவேலின் அரசியல் பார்வை எழுத்தில் பூடகமாவே வெளிப்படும். ஆனால் இந்நாவலில் வெளிப்படையாகவே வருகிறது. நாவலில் சுட்டப்படும் தரப்புகளை விவாதிக்கலாம் மறுக்கலாம்....
நவீன கிட்லர்களின் கீழ் அடக்குமுறையாளர்களின் கீழ் இராணுவ ஆட்சிகளில் கூட ஆளும் வர்க்கத்துடன் மௌனமாய் உடன்பட்டவர்களாலோ தத்தம் வேலையைப் பார்த்தவண்ணம் கடந்து செல்பவர்களாலோ அன்றி தமது வரையரைகளுக்குள்ளும் தமக்கு நியாயமெனப் பட்டதை செய்பவர்களாலேயே மனித...
அடர்ந்த காட்டினூடே படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி, உள்ளே புதைந்து போய் மறைந்திருக்கும் நகரைக் கண்டு பிடிப்பது போல் சார்லஸ் ஆலன் வரலாற்றால் மறைக்கப்பட்ட மாமன்னன் அசோகரையும், தன் மக்களின் மகிழ்ச்சி, எங்கும் அமைதி,...
ஆதாரபூர்வமான தகவல்கள். மிரட்டலான மொழிநடை. நெஞ்சு நடுங்க வைக்கும் நிஜம். ஒசாமா பின்லேடன் என்கிற தனி மனிதர், அல் காயிதா என்னும் இயக்கமாக உருவானதன் பின்னணி என்ன? யார் அல்லது எது காரணம்? தமது...
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத்...
ஒரு பக்கம் போர். தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும். மனிதத்தையும் அமைதியையும் வளர்க்கவேண்டிய கிறிஸ்தவ பாதிரிகள் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும்இ எதைச் சிந்திக்கக்கூடாது என்பதை அன்றைய தேவாலயங்கள் தீர்மானித்தன....
ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த கொடூர பயணங்கள், இவற்றிற்கு...
பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர்...
போரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும்...
இந்தியாவை உடைக்க முயலும் சக்திகள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் சக்திகள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அவற்றில் முன்னணியில் இவர்கள் இருப்பார்கள்.இடது சாரித் தீவிரவாதம் பற்றிய அறிமுகத்தை மிகச் சுருங்கக் கூறி விளங்க...
உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத்...
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக்...
தகவல்களில் துல்லியம். மொழியின் அசுரப் பாய்ச்சலால் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது. அல் காயிதாவுக்கு நிகராக உலகம் அஞ்சும் மற்றுமொரு தீவிரவாத இயக்கம்இ ஹமாஸ். பாலஸ்தீன் விடுதலையை நோக்கமாகக் கொண்டு உருவான...