காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு.
ஆயிரம் பேருக்குச் சமைக்கும் இந்தக் கலைஞர்களின் அன்றாடத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாக குடிக் கலாச்சாரம் பின்னிக்கிடப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நாவல். உரையாடல்களால் ததும்பி வழியும் ஒரு பாதையில் இந்நாவல் பயணிப்பது வாசிப்பை இலகுவாக்குகிறது....
மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழுந்த பரபரப்புகளும் கண்டனங்களும் இன்று சரித்திரமாகிவிட்டன. சாகித்ய அகடமி பரிசு பெற்ற இ.பாவின் இந்நாவல் ஆங்கிலம்,...
இணையத்தின் #1 தேடல் இயந்திரம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் விறுவிறுப்பான வெற்றிக்கதை! இன்றைக்கு நாம் எதைத் தேடுவதென்றாலும் முதலில் கூகுளுக்குதான் ஓடுகிறோம். எங்கேனும் செல்வதென்றால் கூகுள் மேப்ஸிடம் வழி...
கூளமாதாரி, பண்ணையாட்களாக வேலை செய்யும் தலித் சிறுவர்களின் வாழ்வை அவர்களின் பார்வையினூடாக விவரிக்கிறது. பதின்பருவத்தின் அவர்கள் இல்லாமை, அதிகாரம், சுயநலம், தீண்டாமை முதலியவற்றின் பிடிகளுக்கு உட்பட்டும் உயிரியல்பான அன்பு, காதல், காமம் உள்ளிட்டவற்றின் மலர்ச்சிக்கு...
காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு...
நாம் தற்போது பயன்படுத்தும் கேலிச்சித்திரம் அல்லது நையாண்டிப் பொருள் கொடுக்கும் ‘கார்ட்டூன்’ சொல் பயன்பாட்டை பிரிட்டிஷ் பத்திரிகை ‘பஞ்ச்’ தொடங்கியது என்று சொல்கிறார்கள். 1843இல் பார்லிமெண்ட் கட்டிடம் தீக்கிரையானபோது அதன் புனரமைப்பின் தருணத்தில் பிரிட்டிஷ்...
கேஜிபி – சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு...
தற்கால நிலைமையில் தங்களது புத்தகம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. வேலைகளை உருவாக்குவது மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுதான் இந்த கடுமையான காலகட்டத்திலிருந்து மீள்வதற்கு வழிவகுக்கும். – டாக்டர் பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும்...
ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய் , ஆழம் புதைந்து கிடக்கும். உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது. பாசத்திற்கும், அன்பிற்கும், பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே...
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன்...