என் கதைகளில் எந்தத் தவறுமில்லை.தவறு என்று சொல்லப்படுகிற அனைத்தும் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால்,நம் காலத்தைத் தாங்கிக் கொள்ள உங்களால் முடியவில்லை என்றுதான்...
அனிதா – இளம் மனைவி, குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு...
இந்தியர்களாகிய நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? நம்முடைய முன்னோர்களைப் பற்றிய கதையை நமக்குச் சொல்வதற்காக, பத்திரிகையாளர் டோனி ஜோசஃப், வரலாற்றின் ராஜபாட்டையில் 65,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளார். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற...
ஹுசைனி தன்னுடைய எழுத்துலகப்பிரயாணத்தைத் தன் நாட்டின் ஆண்கள் குறித்து எழுதி துவக்கியிருக்கிறார் என்றாலும் ஒரு நாவலாசிரியராக அவருடைய முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்திருப்பது ஆஃப்கானிஸ்தானின் பெண்களின் நிலையே. – தி டைம்ஸ் ‘பெண்களுக்கு வாழ்க்கை என்னவாக இருக்கிறது...
‘மாதொருபாகன்’ முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும்...
பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப்...
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று...
இது அம்பேத்கர் எழுதிய முதல் நூல் என்பதால் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கம் காரணமாகவும் முக்கிய நூலாக விளங்குகிறது. அவரின் பிற்கால அரசியல் செயற்பாடுகளின் செயற்களமாகவும், ஆய்வுச் சிந்தனைகளாகவும் அமைந்த சாதி மறுப்பு அரசியலின் தொடக்கமாக...
பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே...
வாழ்வு குறித்த சுதந்திரமான பார்வையுடன் இலக்கியப் பரப்பில் கவனம் பெற்றிருக்கும் கே.என். செந்தில் கடந்த காலத்துடனான உறவை முறித்துக்கொள்ளும் எத்தனிப்புகள் கொண்டவர். அவரது படைப்புமொழி வாழ்வுக்குக் கடந்த காலம் வழங்கியுள்ள அர்த்தங்களை நம்ப மறுப்பது....